Categories
மாநில செய்திகள்

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறேன்” எம்.பி ரவீந்திரநாத்..!!  

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கிறேன் என்று மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் முத்தலாக் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார்  மசோதாவிற்கு  ஆதரவாக வாக்களித்தார். ஆனால் மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் எதிராக வாக்களித்தனர். இதனால் அதிமுக முத்தலாக் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தது. அதிமுகவிலும் சற்று சலலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ஏன் என்று கேட்டால் பதிலில்லை…. ப.சிதம்பரம் ட்வீட் ..!!

மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்.ஏன் என்று கேட்டால் பதிலில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜகவினர் ஜாதி கட்சியை நம்புவார்கள்” சீமான் கடும் தாக்கு…!!

பாஜகவினர் ஜாதி கட்சியை அதிகமாக நம்புவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். ஆனால் இவங்களோட திட்டம் காஷ்மீரை போல இரண்டாக உடைக்க வாய்ப்பு உள்ளது. சாதி கட்சிகளை அதிகமாக நம்புவார்கள் பாஜகவினர். அவங்களுக்கு வடதமிழகம் , தென் தமிழகம் என்று பிரித்து சென்னையை புதுச்சேரி போல ஒரு யூனியன் பிரதேசமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது அவசியமற்றது.இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!

மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு  ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பியானார் மன்மோகன் சிங்..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு : ”பங்கேற்ற 126 வெளிமாநிலத்தவர்” மதுரை கிளை நோட்டீஸ்…!!

தமிழக  மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவருக்கும் , 15 சதவீத இடங்கள் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 126 வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர். எனவே இந்த மருத்துவ கலந்தாய்வை  ரத்து செய்து , புதிய கலந்தாய்வு […]

Categories
அரசியல் ஈரோடு மாநில செய்திகள்

38 MP_க்கள்….38 பைசா…. “‘பிரயோஜனம் இல்லை” அமைச்சர் KC கருப்பணன்….!!

38 திமுக MP_க்கள் 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் மூன்று மாதத்தில் , ரெண்டு மாதத்தில் , ஒரு மாதத்தில் ஆட்சி போய்விடுமென்று  3 ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். ஆட்சி போய்விடுமென்று என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுடன் இணைப்பு …”போயஸ் கார்டன் எனக்கு”.. ஜெ.தீபா பேட்டி …!!

போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். அதிமுக  தொண்டர்களான மக்களுக்காக நான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கி இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள் , பல கட்டங்களை தாண்டி இந்த இயக்கத்தை நடத்தி வந்தேன். எனது அத்தையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அம்மா அவர்களின் இலட்சியக் கனவு இன்னும் நூறாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் இருக்க வேண்டும் என்ற அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பால் விலை உயர்வு” அரசியல் ஆக்கப்படுகிறது… தமிழிசை பரபரப்பு குற்றசாட்டு..!!

பால் விலை உயர்வை பலரும் அரசியல் ஆக்கி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மந்தா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை  பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் ராஜலட்சுமி மம்தாவின் இருசக்கர வாகனத்தில் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டமாக தேனி மாறும்… துணைமுதல்வர் OPS நம்பிக்கை..!!

இன்னும் 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மற்றும் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் முறை நிதி உள்ளிட்டவற்றை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பெண்களுக்கு நிதிகளை வழங்கினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
அரசியல்

”தீபா பேரவை அதிமுகவுடன் இணைப்பு” தீபா பேட்டி …!!

தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்தது செயல்படுமென்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு  சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை அதிமுகவில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பீகார் முதல்வர் மரணம்… 3 நாள் துக்கம் அனுசரிப்பு..!!

பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் ஜெகநாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் காலமானார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து பின் அரசியலில் காலடி எடுத்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா 1975,1980, மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் பதவி காலத்தில் இருந்த பொழுது மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், 2013 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் தண்டனையாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் அடுத்து என்ன…?அமித்ஷா -அஜித் தோவல் ஆலோசனை…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்_லுடன் ஆலோசனை நடத்துகின்றார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெடிகுண்டு பதுக்கல்”முன் ஜாமீன் கிடையாது… வசமாக சிக்கிக்கொண்ட MLA ..!!

பீகாரில் AK 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த குமார் சிங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்த் சிங் வீட்டிலிருந்து ஏகே47 கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

கலக்கத்தில் காங்கிரஸ் ”ப.சிதம்பரத்திற்கு சம்மன்” அமலாக்கத்துறை அதிரடி…!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதுஏர் இந்தியா நிறுவனத்திற்கு , இந்தியன் ஏர்லைன்ஸ்   நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கின்றது. யாரெல்லாம் இதில் முக்கிய பங்கற்றியுள்ளார்கள் என்று ஆராய்ந்து , இடைத்தரகர் உட்பட அனைவரையும்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ”டெல்லிக்கே சென்று போராட்டம்” திமுக அறிவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 22ஆம்  டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகின்றது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டம் போட்ட வன்முறை…. ”அடக்கியது அரசாங்கம்”….4,000 பேர் கைது …!!

ஜம்முவில் வன்முறையில் ஈடுபட்ட 4000 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த மத்திய அரசு ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்தது.இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் முன்பாக அதிக இராணு படை வீரர்களை குவித்து , பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து விட்டு , 144 தடை உத்தரவை பிறப்பித்ததோடு முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டு இந்த நடவடிக்கையை மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழகமும் யூனியன் பிரதேஷமாக மாறும்” சீமான் பேட்டி ….!!

தமிழகத்தையும் யூனியன் பிரதேஷமாக மாற்றுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்ட பிரிவை மத்திய அரசு இரத்து செய்து கடந்த 5_ஆம் தேதி அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு  தமிழகத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதே போல […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி ”இதயம் , நுரையீரல் இயங்கவில்லை” எய்ம்ஸ் வளாகம் பரபரப்பு…!!

அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை என்று தகவல் வெளியாகியதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் வளாகம் பரபரப்பாக காணப்படுகின்றது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் ”சிறப்பு குறைதீர்ப்பு திட்டம்” முதல்வர் தொடங்கி வைத்தார்…!!

முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் நேரடியாக புகார்களை பெற்று அதை கணினியில் பதியப்பட்டு விரைவில் தீர்வு எட்டப்படும் முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய சோரகை  பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் அங்குள்ள பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது 1 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம்.  நடக்குமா நடக்காதா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நாளை அமைச்சரவை பதவி ஏற்பு…..!!

கர்நாடகாவில் நாளை அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் கர்நாடக அமைச்சரவை இதுவரை பதவி ஏற்கவில்லை.இந்நிலையில் நாளை மறுநாள் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் அமைச்சரவை பட்டியல் குறித்து […]

Categories
சேலம் மாநில செய்திகள்

7 நாட்களில் தீர்வு ”சிறப்பு குறைதீர்ப்பு திட்டம்” முதல்வர் தொடங்கி வைக்கிறார்…!

மக்களின் குறைகளை  நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிவர்த்தி செய்யும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் தொடங்கி வைக்கிறார். சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் அனைத்து நகரங்களிலும் , கிராமங்களிலும்  விளம்பரம் செய்யப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த குழுவினர் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

திறந்துடுச்சு….. ”ஜம்முவில் 190 பள்ளிகள் திறப்பு”….. இயல்பு நிலையில் ஸ்ரீநகர் …!!

ஜம்முவில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த மத்திய அரசு ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்தது.இதையடுத்து ஜம்முவில் இணைய சேவை துண்டிப்பு முன்னாள் முதல்வர்கள் வீட்டு சிறையில் அடைப்பு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஏதேனும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டது. இதோடு இல்லாமல் ஆகஸ்ட் 15-தை ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் முதல் சுதந்திர தினமாக சிறப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் போகல….. ”200 MP_க்கள் இராஜ வாழ்க்கை”…. அரசு பணம் ஸ்வாகா …!!

முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக மக்களவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு” தேர்தல் ஆணையம் கடிதம்…!!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பது குறித்து மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்தியாவில் ஒருவர்  ஒன்றுக்கும் மேற்பட்ட , பல இடங்களில் வாக்காளர்களாக இருந்து வருகின்றார்.இதனால் சில குளறுபிடிகள் நடைபெறுகின்றது.எனவே வாக்காளர்களை முறையாக சீர்படுத்துவர்க்கு வாக்காளரின் ஆதார் எண்கள் அவசியமாகின்றது. எனவே புதிய மற்றும் பழைய வாக்காளர்களின் ஆதார் எண்களை பெறுவதற்கு அனுமதி வேண்டும். இதற்க்கு அரசு மக்கள் பிரதிநிதித்துவ […]

Categories
தேசிய செய்திகள்

 ”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” எக்மோ கருவி பொருத்தம் …!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லிக்கு   எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின்  உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”எய்ம்ஸ் வருகின்றார் மோடி”அருண் ஜெட்லிக்கு என்ன ஆச்சு..?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின்  உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

”வைகோ அப்பல்லோவில் அனுமதி” கவலையில் தொண்டர்கள்…!!

உடல்நலக்குறைவால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் 21 20 21 22 ஆகிய தேதிகளில்தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சி சார்ந்தவன் இல்ல ”சோழ மண்டலத்தில் பிறந்தவன்” TTV தினகரன் பேட்டி…!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று சோழமண்டலத்தில் பிறந்து , வளர்ந்தவனாக சொல்கின்றேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமி மழையில் செய்தியாளர்களை சந்தித்த TTV.தினகரன் கூறுகையில் , டெல்டா மாவட்ட மக்கள் காவிரி விவசாயப் பகுதி மக்களை அரசியல் கட்சிகளோ இல்லை , வேறு சமூக விரோதிகளை தூண்டி விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்த வில்லை.  நமது வாழ்க்கை, விவசாயம் அழிக்கப்பட்டு விடும் என்கின்ற உணர்வோடு எல்லாரும் போராடுகின்றனர். மத்திய அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இந்த மீத்தேன் , ஹைட்ரோகார்பன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நாங்க யானை பலத்துடன் இருக்கோம்” TTV தினகரன் அதிரடி பேட்டி…!!

அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். சில பேர் துரோகம் செய்வார்கள். பதவி , எம்எல்ஏ , மாவட்ட செயலாளர் இதெல்லாம் துறந்து பலர் இருக்கின்றார்கள். அரசியல் எம்எல்ஏ_வாக வேண்டுமென்பது தான் அரசியலில் வெற்றி என்று நினைத்தால் அது தவறு. வருங்காலம் நிச்சயம் நிரூபிக்கும்.மக்கள் நலனுக்காக போராட வேண்டியது […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி_க்கு எக்மோ சிகிச்சை” உடல் நிலை மேலும் பின்னடைவு….!!

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகி  எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க முடியாது…. ”அங்க தான் முடியும்” …. கமலை கலாய்த்த அமைச்சர்…!!

கமல்ஹாசன் சினிமாவில்தான் முதல்வராக முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலடித்துள்ளார். மதுரை மாவட்டம் பென்னர் நகரில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நடைபெற்றது. இதில் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். அதே போல மதுரை காளவாசல் பகுதியில் மக்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக குப்பை சேகரிக்கும் 99 வாகனங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்பின் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்வராக முடியும்,தேர்தல்களின் முடிவுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ம.நீ.ம ”மழையில் முளைத்த காளான்” ராஜேந்திர பாலாஜி விமர்சனம்…!!

மக்கள் நீதி மய்யம் மழையில் முளைத்த காளான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூடுதலாக 5 பொதுச்செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர்.   அதே போல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக முடிவு கவர்கின்றது… ”அமெரிக்காவிலும் கொடி பறக்கும்” அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி ..!!

பாஜக எடுக்கும் முடிவு அதிமுகவை கவர்ந்துள்ளது, முதல்வரின் கொடி அமெரிக்காவில் நாட்டப்படுமென்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல்வரின் இந்த பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகின்றார். நீலகிரி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட செல்ல நேரமில்லாத முதல்வர் அமெரிக்கா செல்கின்றார் , சீன் போட செல்கின்றார் என்று விமர்சித்த்தார். இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” மிகுந்த சோகத்தில் பாஜகவினர்…!!

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்முவில் மீண்டும் இணைய சேவை” தளர்க்கப்படும் கட்டுப்பாடுகள்…!!

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில்  இணையதளசேவை மீண்டும்  கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வாழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு இரத்து செய்து அதன் மசோதாவை மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றியது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் இரண்டு  யூனியன் பிரதேசங்களாக  மாறியது. இதனால் அங்கு நடக்கும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்ட்து. 144 தடை உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் 19-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி திறப்பு ….!!

ஜம்முவில் வருகின்ற 19-ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கபட்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் இது மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜம்மு மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த விவகாரத்தை மிகவும் துணிச்சலுடன் எடுத்தது. ஆகஸ்ட் 5_ஆம் தேதிக்கு 1 […]

Categories
அரசியல்

“வாஜ்பாய்”மறைந்தும் மக்கள் மனதில் நிற்கும் உன்னத தலைவர்…. மோடி புகழாரம்..!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு  தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நாட்டின் வளர்ச்சியில் எப்பொழுதும் வாஜிபாய்க்கு முக்கிய பங்கு உண்டு என்றும், மறைந்தாலும் மக்கள் மனதில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீதிமன்றங்கள் எல்லை மீறுகின்றன… சட்ட அமைச்சர் அதிருப்தி..!!

உயர் நீதிமன்றங்கள் பொது நல  மனுக்களை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர்  அடங்கிய மேடையில் பேசிய அவர் நீதித்துறையை ஒழுங்குபடுத்த உள் சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். நீதிபதிகளின் தீர்ப்பு பொறுப்பு மிகுந்தவையாக இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்த அவர், இது உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திற்கும் பொருந்தும் என்றும்  ரவிசங்கர் பிரசாத் கூறினார். சில நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை […]

Categories
உலக செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” சீனா கைவிட்டதால் பின்னடைவு… அதிர்ச்சியில் பாகிஸ்தான்..!!

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று ஐநா சபையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், இதனை சீனா பெரிதளவு கண்டு கொள்ளாததால்பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட பின் இதற்கு  எதிராக  இந்தியாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்தும் இதற்கான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதே நிலையில் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக பிரித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு […]

Categories
அரசியல்

“சமபந்தி விருந்து” கோவில் கோவிலாக சென்று உணவு உண்ட அதிமுக அமைச்சர்கள்..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சென்னை கேகே நகர் சக்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடுகளை முடித்து விட்டு அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார்.  சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தியில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இவர்களை தொடர்ந்து  சென்னை அடையாறு பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்ற விருந்தில்  அமைச்சர் செங்கோட்டையனும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS ஆட்சி ”சேரன்,சோழ,பாண்டியன்” ஆட்சி – ராஜேந்திர பாலாஜி புகழாரம் …!!

சேரன் , சோழன் , பாண்டியன் ஆட்சிக்கு பிறகு அதிக தடுப்பணையை கட்டியது முதலமைச்சர் பழனிசாமி அரசுதான் என்று   அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , நீலகிரி மாவட்டம் மழை வெள்ளப் பாதிப்புக்கு திமுக 10 கோடி ரூபாய் கொடுத்ததாக மு க ஸ்டாலின் கூறுவது பொய் . தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிட்டில் நிவாரண உதவி செய்து விட்டு எதோ திமுக அறக்கட்டளையில் இருந்து நிதி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”கைகளில் ஜாதி கயிறு” பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை…!!

பள்ளிகளில் மாணவர்கள் கையில் ஜாதி கயிறு கட்டும் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் புரட்சியாளர் புரட்சிக் கவிஞன் பாரதியார்.சாதி எனும் மாயம் குழந்தைகளை பாதித்து விட்டால் எதிர்காலத்தில் வளமான ஒரு சமுதாயம் உருவாகாது என்பதற்காகத்தான் அவர் அப்படி பாடினார் ஆனால் பாரதியின் இந்த கூற்றுக்கு நேரெதிராக நவீன வடிவில் சாதிக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. உத்தரகாண்டில் உள்ள முசோரியில் IAS அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற்றது. அதில் தமிழக பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் குறித்து ”காத்திருந்து பாருங்கள்” ரஜினி பதிலடி …!!

போயஸ் கார்டன் அரசியலின் அதிகார மையமாக விளங்குமா என்ற கேள்விக்கு  காத்திருந்து பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவும் வீடாக இருக்கின்றது.இது தொடர்பாக அமித்ஷா எடுத்த நடவடிக்கை ராஜதந்திரம் என்று புகழ்ந்தார். மேலும் இதை நன்கு தெரிந்த அரசியல்வாதிகள் அரசியலாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.கட்சி அறிவிப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , நான் சொல்றேன். எப்போ என்று […]

Categories
மாநில செய்திகள்

காஷ்மீர் கையாண்ட விதம் ”ராஜதந்திரம்” ரஜினி கருத்து …!!

காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுஅமித்ஷா , மோடி செயல்பட்டது ராஜதந்திரம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ,   தேசிய விருது தமிழா சினிமாவிற்கு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது. காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியும் , அமித்ஷாவும்  கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். பயங்கரவாதிகளுக்கும் , தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் தாய் வீடாக உள்ளது. அமித்ஷாவின் இந்த நடவடிக்கை ராஜதந்திரம் மாநிலங்களவையில் பெரும்பாண்மை இல்லை என்று தெரிந்தும் அதை அங்கே தாக்கல் செய்து மக்களவைக்கு கொண்டுவந்து […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு : ”சட்டமன்றத்தை கூட்டுக” முக.ஸ்டாலின் அறிக்கை …!!

நீட் விலக்கு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை  விடுத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீட் விளக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும். விளக்கம் கேட்கிறோம் என்ற போர்வையில் கடிதம் எழுதி அதிமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் , நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொத்து குவிப்பு வழக்கு”… ஆவணங்களை சமர்ப்பியுங்கள்… உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இதனை விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணையை சரியாக நடத்தாமல் பதிலையே கைவிடப்பட்டது. இதற்கு காரணமாக புகாரில் முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 பொதுச்செயலார்கள் ….. 16 மாநில செயலாளர்கள் …… மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு …!!

மக்கள் நீதி மயத்தில் மேலும் 4 பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சில ஆதரவு இருப்பதை வாக்கு சதவீதம் காட்டியது. இதை அடுத்து மக்கள் நீதி மையத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கட்சியில் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தலைவர் , துணைத் தலைவர் , செயலாளர் , பொதுச்செயலாளர் 6 பேர் செயலாளர் என்ற முறையில் தற்போது அறிவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜகவின் ஒரு கை அதிமுக” மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம்…!!

பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார் நீலகிரியில் பெய்த கனமழையால் அந்த மாவட்டம் முற்றிலுமாக சேதாரம் அடைந்துள்ளது.நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அரசு நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]

Categories

Tech |