Categories
அரசியல்

மேடையில் கண் கலங்கிய கேப்டன் மகன்…. அழுகுரல் பேச்சால் தொண்டர்கள் சோகம்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவதாக கூறி அவரது மகன் விஜய பிரபாகரன் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.  விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அடுத்த தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயபிரபாகரன், விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளது ஆனால் அவரது உடல்நிலை குறித்து சிலர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் அடிமையாக நடத்தியது” நொந்து போன குமாரசாமி…..!!

என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது  என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரத்தை காட்டு ”வழக்கு வாபஸ்” ப.சிதம்பரம் தரப்பு சவால் …!!

ப.சிதம்பரத்தின் வெளிநாட்டில் சொத்து வாங்கியதற்கான ஆதாரத்தை காட்டினாள் வழக்கை வாபஸ் பெறுகின்றோம் என்று ப.சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.   ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார் , விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி” கைவிரித்தது உச்சநீதிமன்றம்…!!

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார்.விசாரணை நடந்து வருகிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையை அவருடைய முன்ஜாமின் மனு என்பது […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான பாதுகாப்பு குறைப்பு…. மத்திய அரசு அதிரடி…!!

மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இருக்கும் மிக முக்கிய அரசியல் பிரபலங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசால் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கபப்டடு வருகின்றது. அந்த வகையில் தற்போது பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக குடும்ப கட்சி ”ஒரே ட்வீட்” உதயநிதி ஸ்டாலின் பதிலடி….!!

திமுக குடும்ப கட்சி என்று விமர்சிப்பவர்களுக்கு ஒரே ட்வீட்_டில் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு கடந்த ஜூன் 4_ஆம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து திமுக குடும்ப கட்சி , அது ஒரு கம்பெனி […]

Categories
தேசிய செய்திகள்

”பிளாஸ்டிக் இல்லா இந்தியா” பிரதமர் மோடி வேண்டுகோள் …!!

காந்தியில் பிறந்தநாளில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவாக உருவாக்க வேண்டுமென்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் மாதம் ஒருமுறை வானொலி மூலம் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலமாக மோடி பேசுவார்.அந்த வகையில் இன்று பொதுமக்களிடம் பேசிய மோடி அக்டோபர் 2ந்தேதி  தேச பிதா மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் தினம் பற்றி உலகம் நாடுகள் முழுவதும் உள்ள மக்கள் பரவலாக பேசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விஜயகாந்த் பிறந்த நாள்” தலைவர்கள் வாழ்த்து ….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 67_ஆவது பிறந்தநாளை விழாவை கொண்டாடி வருகிறார்.இதற்காக அவர் நேற்று 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அவருடைய பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகதிற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். முன்னதாக விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி100 கிலோ எடையுடைய கேட்க வெட்டப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதிக்கு 10,000…..நவ 14_க்குள் 30,00,000….. பாயும் உதயநிதி ஸ்டாலின்…!!

திமுக இளைஞரணி கூட்டத்தில் நவம்பர் 14_க்குள் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர , மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டி 100 அடி சாலையில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் இளைஞரணி  துணைச் செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். கலைஞரின் திருவுருவப்படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக இளைஞரணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜக அலுவலகத்தில்  அருண் ஜெட்லி உடல்” ஜேபி நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி..!!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில்  அருண் ஜெட்லி உடலுக்கு ஜேபி நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டது..!!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டது  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்று   சிகிச்சை பெற்று வந்த நிலையில் அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

ஜிஎஸ்டி நாயகன்….”அருண் ஜெட்லி” ( 1952-2019) வரலாறு….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.இவரின் தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி தாய் ரத்தினம் பிரபாத் ஜெட்லி.இவர் தமது இளமைக் கல்வியை டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார்.இளங்கலை மற்றும் சட்டம் படித்த ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் மாணவர் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் […]

Categories
தேசிய செய்திகள்

“பொது வாழ்க்கையில் அருண் ஜெட்லி செய்த பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும்” சோனியா காந்தி இரங்கல்..!!

பொது வாழ்க்கையில் அருண் ஜெட்லி செய்த பங்களிப்புகள் என்றும் நினைவில் இருக்கும் என்று சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.   பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தனித்துவமான திறனைக் கொண்ட அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தம் – குடியரசு தலைவர் இரங்கல்..!!

அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டு உடல்நிலை மோசமானதால்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக […]

Categories
மாநில செய்திகள்

“பிற கட்சியினருடன் அன்பாக பழகக்கூடியவர்” அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு… தமிழக முதல்வர் இரங்கல்..!!

பிற கட்சியினருடன் பழகக்கூடிய பண்பாளர் அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித […]

Categories
மாநில செய்திகள்

“அருண் ஜெட்லி மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது” ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்..!!

நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் […]

Categories
தேசிய செய்திகள்

“மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்” பிரதமர் மோடி உருக்கம்..!!

 நான் ஒரு மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.   பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அதற்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெட்லியின் மறைவு  எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு” மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல்..!!

ஜெட்லியின் மறைவு  எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட போட்டியிடாமல் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். அருண் ஜெட்லி உடல்நிலை […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கிக்கோங்க…. ரூ 70,000,00,00,000 ஒதுக்கீடு…. ”வீடு,கார் வட்டி குறைப்பு” மத்திய அரசு உறுதி ..!!

பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி அரசு சார்பில் ஒதுக்கப்படுமென்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில் , நிறுவனங்கள் ஆரம்பிக்க பலரிடம் இருந்து பெறப்படும் பணத்துக்கு வசூலிக்கப்பட்டு வந்த Angel Tax ரத்து செய்யப்படுகிறது.ஒரே தவணையில் கடனை திரும்ப செலுத்தும் முறையில் வெளிப்படைத் தன்மை […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : GST , கடன் மீதான வட்டி குறைப்பு – மத்திய அரசு அதிரடி…!!

GST குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடன் மீதான வட்டி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில் , அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரத்தின் CBI காவல் இரத்து” உச்சநீதிமன்றத்தை நாட முடிவு …!!

ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைத்துள்ள உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து வருகின்ற 23_ஆம் தேதி முதல் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பார்.அதே வேளையில் இன்று உச்சநீதிமன்றம் ப.சிதம்பத்துக்கு அமலாக்கத்துறை வழக்கில் இன்று முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் திங்கள் கிழமை சிபிஐ காவலில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ 600 தருகின்றோம் ”நீரை சிக்கனமாக பயன்படுத்துங்க” முதல்வர் அறிவிப்பு…!!

நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 600 ரூபாய் மானியம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகள் காவிரி நீரை ஆதாரமாக கொண்டு ஆண்டுதோறும் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 13-ம் தேதி நீர் திறக்கப்பட்ட நிலையில்அந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.அதில்  நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வழக்கு ”அப்பா,மகன் கைது” செப்.3_இல் உத்தரவு …!!

ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன வழக்கின் கைது செய்வதற்கான தடையை நீட்டிக்கும் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் செப்.3_ஆம் தேதி உத்தரவை பிறப்பிக்கின்றது. ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடுகளை செய்த வகையில் மோசடி நடைபெற்றதாகவும், அன்னிய முதலீட்டை பெறுவதில்பண பரிமாற்றம் செய்வது சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்த குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில்  சிபிஐ மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் மேல் முறையீடு” உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை…!!

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அண்மையில் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக  ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா […]

Categories
அரசியல்

வாங்க… வாங்க… “சுவையானது ருசியானது” கிராம மக்களுக்கு டீ போட்டு அசத்திய முதல்வர்..!!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு தன் கைகளால் தேனீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக அரசியல் கட்சிகள் தலைவர்கள் சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகுவது போன்ற காட்சிகள் அடிக்கடி இணையதளத்தில் வைரலாகி வருகிறது உதாரணமாக மக்களவை தேர்தல் காலங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகான் அவர்கள் நாள்தோறும் துப்புரவு பணியாளர் பதநீர் விற்பவர் உள்ளிட்ட செய்முறைகள் மூலம் மக்களுடன் நெருங்கிய நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”ப.சிதம்பரத்திற்கு 5 நாள் CBI காவல்” நீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்து இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கியசிபிஐ ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சிறிது நேரத்தில் தீர்ப்பு…. ”பரபரப்பாக டெல்லி” போலீஸ் குவிப்பு…!!

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினார். இந்த விசாரணையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகியோரும் சிபிஐ_க்கு ஆதரவாக  துஷார் மேத்தா_வும் வாதாடினார். பின்னர் இந்த விசாரணை 1.30 மணி நேரம் நடைபெற்றது.இரண்டு தரப்பும் மாறி மாறி தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அனல் பறக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஆதாரம் இருக்கு’ ‘கஷ்டடி வேண்டும்’ அடம்பிடிக்கும் சிபிஐ தரப்பு..!!

ஆதாரம் இருப்பதால் கஷ்டடியில் வைக்க அனுமதி தர வேண்டுமென்று சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ மற்றும் சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்றன இறுதியாக சிதம்பரம் தரப்பு வக்கீல்களான அபிஷ்மன்யூ , கபில்சிபில் ஆகியோர் வாதாடிய நிலையில், மீண்டும் சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டம் குறித்து நன்கு அறிந்த சிதம்பரத்திக்கு பதில் சொல்லாமல் சட்டத்தை எப்படி தட்டிக்கழிக்க முடியும் என்று நன்கு தெரியும் […]

Categories
தேசிய செய்திகள்

“சிபிஐ vs ப.சிதம்பரம்” சரசர கேள்வி… வழக்கறிஞர்கள் மோதல்..!!

ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ , சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபிலை தொடர்ந்து  அபிஷேக் மனு சிங்வி வாத்தி பேசினார். அதில், சிதம்பரம் அவர்களுக்கு அளிக்கப்பட  இடைக்கால முன்ஜாமீனை 7 மாதம் கழித்து இரத்து செய்தது எதற்காக?பணம் கொடுத்ததாக சிபிஐ கூறுகின்றது எங்கு கொடுத்தார்கள். யார் கொடுத்தது? என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும்.  அப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே இன்றி சாட்சியம் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் வழக்கு ”தீர்ப்பு ஒத்திவைப்பு” சிபிஐ நீதிமன்றம் உத்தரவு…..!!

ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை நிறைவடைந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.   மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

குற்றப்பத்திரிக்கையில் சிதம்பரத்தின் பெயரை சேர்க்க நடவடிக்கை… சிபிஐ தரப்பு..!!

ஐஏன்எக்ஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டு வருவதாக சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை  நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது புன்னகைத்த படியே சென்ற சிதம்பரம் விசாரணை கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டார். பின்னர் விவாதம் தொடங்கிய போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார் எனவே சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது.மேலும் சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், இவர் மீது வெளிவர […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்”அழைத்து வந்தது சிபிஐ…!!

நீதிமன்றத்தில் ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.   மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : சற்று நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜர்……!!

இன்னும் சற்று நேரத்தில் ப.சிதம்பரம்  ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றார். இன்று காலை 10 மணிக்கு பிறகு ப. சிதம்பரத்திடம் முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியது. அதில் அந்நிய முதலீட்டில் ஐஎன்எக்ஸ் மீடியா வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட தேதிகள் ,  லஞ்சப்பணம் செலுத்தப்பட்ட கணக்குகள் ,  அமலாக்கத் துறை குறிப்பிடும் நிறுவனங்களின் எந்தெந்த தேதிகளில் பணம் செலுத்தப்பட்டது செலுத்தப்பட்ட தேதி போன்ற அடிப்படை விவரங்கள் விசாரணை கேட்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரிதாபத்தில் ப.சி…”கை கழுவிய தமிழ்.காங்” புறக்கணித்த தலைவர்கள்…!!

ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

4 ரைய்டு… 20 சம்மன்…சிபிஐ விருந்தாளி…. அசால்ட் கொடுத்த பா.சி மகன்…!!

ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்துள்ள சூழலில் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் அசால்ட்டாக பேசியது அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]

Categories
அரசியல்

“ஐஎன்எக்ஸ் வழக்கு”மடில கணம் இல்லைனா வழியில் பயம் ஏன்..? தமிழிசை கேள்வி..!!

சிதம்பரம் கைது தொடர்பாக பேசிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டெல்லியில் திமுக போராட்டம்- 14 கட்சிகள் பங்கேற்பு ….!!

டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை என்று கடுமையான கண்டனம் தெரிவித்த திமுக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்த் பகுதியில் திமுக மக்களவை தலைவர் TR.பாலு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றது. […]

Categories
அரசியல்

“ஐஎன்எக்ஸ் வழக்கில்” சிபிஐ நெறிமுறைகளை பின்பற்றவில்லை… கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு..!!

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் எந்தவித தார்மீக நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு […]

Categories
அரசியல்

‘சிதம்பரம் கைதுக்கும்’ ‘மத்திய அரசுக்கும்’ சம்பந்தமில்லை… H.ராஜா பேட்டி..!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கைக்கும்,  மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை […]

Categories
அரசியல்

காஷ்மீர் விவகாரத்தை மறைக்கவே சிதம்பரத்தின் கைது… பாலகிருஷ்ணன் குற்றசாட்டு..!!

காஷ்மீர் விவகாரத்தை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் […]

Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்… அதிமுக அமைச்சர் கருத்து..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் […]

Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” பழி வாங்கும் நடவடிக்கை…. திருமாவளவன் கண்டனம்..!!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]

Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” விதைத்தது விளைந்திருக்கிறது…. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து…!!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது விவகாரத்தில் விதைத்தது விளைந்திருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]

Categories
அரசியல்

சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்..? கராத்தே தியாகராஜன் கேள்வி..!!

சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]

Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” மிக மிக தவறான நடவடிக்கை… மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து..!!

பா சிதம்பரம் கைது செய்யப்பட்டது மிக மிக தவறான நடவடிக்கை என மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப.சிதம்பரம் கைது : தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…..!!

ப.சிதம்பரத்தை  கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து இரவோடு இரவாக சிபிஐ […]

Categories
அரசியல்

சிதம்பரத்தின் கைது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்… R.S.பாரதி கருத்து..!!

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் இன்று திமுக போராட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.காஷ்மீரில் மத்திய அரசின் விவகாரம் குறித்து கடந்த 19_ஆம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 4 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்?

ப.சிதம்பரத்தை இன்று மாலை 4 மணிக்கு  ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்த இருக்கின்றார்.  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால்  கைது செய்யப்பட்டார். அவரை இரவே சிபிஐ அலுவலகத்திற்கு தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். மேலும் அவருக்கான உணவு , மருத்துக்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக […]

Categories

Tech |