Categories
தேசிய செய்திகள்

செல்ஃபோன் சேவை முடக்கம் ”பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது” ஜம்மு ஆளுநர் கருத்து …!!

செல்ஃபோன் சேவைகள் முடக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செல்ஃபோன் சேவைகள் தொடங்கப்பட்டது.இதுகுறித்து அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், ‘செல்ஃபோன் சேவைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவேதான், அதனை முடக்கினோம். தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்படுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், எங்களுக்கு காஷ்மீரிகளின் வாழ்க்கைதான் முக்கியம். இணைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1,64,00,000 பேர் வாக்காளர் பட்டியல் திருத்தம் – சத்யபிரத சாகு

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட அவகாசம், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் வருகிற நவம்பர் 18ஆம் தேதி வரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இப்பணிகளை ஆய்வு செய்ய பத்து ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தலைமைத் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…..!!

 ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜசேகர் புகாரளித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’சீமான் ஒரு அரசியல் தலைவர்போல் செயல்படவில்லை’- நாராயணசாமி

சீமானின் செயல்பாடுகள் எதுவும் அரசியல் கட்சித் தலைவர் செய்வதுபோல் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். இது இந்தியாவை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ராஜிவ் காந்தியை கொச்சைப்படுத்தி விக்கிரவாண்டியில் சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தலைவர்களை இழிவாகவும் பேசிவருவது சீமானின் பழக்கமாக உள்ளது.திரைப்பட இயக்குநராக இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கதருக்குள் காவி-காவிக்குள் கதர்…! – காங்., பாஜகவை கலாய்த்த சீமான் …!!

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கொள்கை அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராஜிவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு, விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். இலங்கைத் தமிழர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிதம்பரத்த வெளிய எடுங்க …. என்ன உள்ள போடுங்க ….. போராடுங்க ….. பின்வாங்க மாட்டேன் …. சீமான் கருத்து …!!

ராஜிவ் காந்தி குறித்து பேசியதை திரும்ப பெற மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டை சுற்றிய போலீஸ் ….. கைதாகும் சீமான் …… பரபரப்பில் அரசியல் களம் …!!

ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசிய சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வாபஸ் பெறுகிறேன்….. தப்பிய கனிமொழி …… நீதிமன்றம் அனுமதி ….!!

தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடுத்த தேர்தல் வழக்கு மனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது. ஓன்று கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றொன்று சந்தனகுமார் என்ற வாக்காளர் தரப்பில் ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு பதவியில் இருப்பதால் ( தெலுங்கானா ஆளுநர் ) கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!

சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தமிழகம் , பாமக இருவருக்கும் ஸ்வாகா ….. இடியாப்ப சிக்கலில் அதிமுக ….!!

கோரிக்கையை அதிமுக நிறவேற்ற தயங்குவதால் பாமக கூட்டணியை விட்டு விலகுவது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலக்கத்தில் அதிமுக…. நாங்க 10 வைத்தோம் …. ஓடப்போகும் பாமக ……!!

புதிய தமிழகம் கட்சியை தொடர்ந்து பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஷாக்…..”கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி…!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பள்ளர், குடும்பர், காலாடி ,பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். (நெல்லை மாவட்ட வாதிரியார் சமூக மக்களும் இதில் […]

Categories
மாநில செய்திகள்

சீனத் தலைவர்களும்… சென்னை பயணங்களும்…!

நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“‘சம்திங்’ தந்தால் தான் உதவிகளை பெற முடியும்” ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

‘சம்திங்’ தந்தால் தான் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு  அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில்  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக  நா. புகழேந்தியும்,  திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரனும்  போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல திமுகவும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

”குற்றவாளிகளை ஆஜர்படுத்த முடியாது” நீதிபதிக்கு கடிதம் எழுதிய காவல்துறை ….!!

சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் […]

Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு வரவேற்பு : ”9, 11 வகுப்பு…. 5,750 மாணவர்கள் பங்கேற்பு ….!!

சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு பள்ளியில் இருந்தும்  எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீன அதிபரை […]

Categories
மாநில செய்திகள்

”தமிழகம் வரும் சீன அதிபர்” 49 KM …… 49,000 பேர் …. 34 இடங்களில் வரவேற்பு ….!!

சென்னை வரும் சீன அதிபருக்கு 34  இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் […]

Categories
மாநில செய்திகள்

தலைவர்கள் வருகை : கப்பற்படை …. விமானப்படை ….. போர்க்கப்பல் ….. 15,000 போலீஸ் பாதுகாப்பு …!!

பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன  அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

”வானிலை குறித்து பேச கூடாது” கெஜ்ரிவாலுக்கு தடை போட்ட மத்திய அரசு …!!

வானிலை மாற்றம் குறித்த மாநாட்டில் மாசுக் கட்டுப்பாடு குறித்து  டெல்லி ம் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பேச அனுமதியை மத்திய அரசு அளிக்காமல் மறுத்துள்ளது. டென்மார்க் நாட்டில் நடைபெறும் வானிலை மாற்றம் குறித்த சி-40 மாநாட்டில் இந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அம்மாநில நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிம், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிமுக்கு மாநாட்டில் பங்கு பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஹரியானா அரசியலில் புதிய திருப்பம்” காங். இணைந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் …!!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளநிலையில் முக்கிய தலைவர்களில் ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாகத் தயாராகிவருகிறது.இந்நிலையில், தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில் ஹரியானாவின் தற்போதைய எதிர்க்கட்சியாகவுள்ள இந்திய தேசிய லோக் தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரஞ்சீத் சிங் […]

Categories
அரசியல்

பற்றி எரிகிறது ”ரஜினி அரசியலுக்கு வருவார்” எஸ்.வி. சேகர் கருத்து ….!!

ரஜினியை முதலமைச்சர் என்றால் பலருக்கு பத்திக்கொண்டு வருகிறது என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து அவர் வாழ்க்கையில் சிறப்பாக வர வேண்டும். ரஜினி முதலமைச்சர் என்று சொன்னாலே பலருக்கு பற்றிக்கொண்டு வருகிறது ஏன் என்று தெரியவில்லை இந்த குதிரைதான் பஸ்ட் ஓடிவரும் நான் சொல்றதுக்கு என்ன உங்களுக்கு ஏன்கோவம் வருது ன்னு தெரியல. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது  என்றால் அது சரியான விஷயம் கிடையாது. அதே போல ரஜினியும் எதுவும் செய்யல வர […]

Categories
அரசியல்

”ரஜினி அரசியலுக்கு வருவார்” நான் அவர் பின்னால் நிற்பேன் ….. ராதாரவி கருத்து …!!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, ரஜினி பின்னால நீக்க ஏன் இருக்கீங்கன்னு சொல்றாங்க. அவர் பிஜேபி நான் அண்ணா திமுக. நாங்க அல்லயன்ஸ் தானே இது தெரியாம பேசிட்டு இருக்கீங்கள.   S.V சேகர் சார் கிட்ட  ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வருவார் அப்படின்னு சொன்னேன். அதற்க்கு ரஜினி வந்தா எப்படி ஜெயிப்பீங்க என்று கேட்டார். ஜெயிக்க வேண்டுமென்றால் பவர் இருக்க வேண்டும் , பணம் இருக்க வேண்டும் , […]

Categories
அரசியல்

நாம குறைஞ்சவுங்க இல்ல….. தான்மனம் இருக்கணும்… கொதித்தெழுந்த தியாகராஜன் ….!!

காமராசர் சமாதிக்கு இதுவரை மலர்வளையம் வைத்திருக்கிறாரா மு.க.ஸ்டாலின்? – கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் கூறுகையில் தென் சென்னையில் இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளும் காங்கிரஸ் படம் போட்டு, தலைவர் ராகுல் காந்தி , அன்னை சோனியா காந்தி , தலைவர் சிதம்பரம் படத்தை போட்டு தான் நாங்க போஸ்டர் அடிக்கின்றோம்.  எங்களை பொறுத்த வரைக்கும் காங்கிரஸ் கட்சியோட ஆதரவாக இருக்கின்றோம். இன்னைக்கு வந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் அழகிரி திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதியை கையில் எடுக்கும் கட்சிகள் ….!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் பாமக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சாதிரீதியாக திரும்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் […]

Categories
அரசியல்

விஸ்வாசம் அற்றவர்கள் ”ரஜினியை பயன்படுத்திட்டாங்க” காங்கிரஸ் மீது பாயும் கராத்தே ….!!

திருநாவுக்கரசர் நடிகர் ரஜினியை நன்றாக பயன்படுத்திவிட்டார், அவர் விஸ்வாசமற்றவர் என்று கராத்தே தியாகராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது , திருநாவுக்கரசர் ரஜினியை பயன்படுத்தி விட்டார். ஒருநாள் பட்டியில் சொல்றாரு எனக்கு நெருங்கிய நண்பர் 40 ஆண்டு கால நண்பர் என்று சொல்கிறார்கள். ஒரு தடவை ரஜினியை சொந்தக்காரர் என்று சொல்கிறார். இப்போ ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார். திருநாவுக்கரசு  ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்றால் ”தப்பா நினைச்சுக்காதீங்க […]

Categories
மாநில செய்திகள்

அலறும் போராளிகள் ”பிரதமர் மோடியின் அதிரடி” கலக்கத்தில் தமிழ்நாடு …..!!

சீனா பொருட்களால் இந்தியாவின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனாப் பொருட்களுக்கு, குறிப்பாக சீனாப் பட்டாசுக்கு மோடி தடை விதிக்க உள்ளார். மேக் இன் இந்தியா பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது சீனா ஏஜெண்டுகள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தை  சீனா தூண்டிவிடுவதாக பாஜக தலைவர்களும், ஒரு சில நடிகர்களும் கூறினார்கள். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசும் போது, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, யார் […]

Categories
மாநில செய்திகள்

”வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல” ராமதாஸ் காட்டமான அறிக்கை ….!!

வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல’  என்று ராமதாஸ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்”… அடித்து சொல்லும் செங்கோட்டையன்.!!

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் போட்டியிடும் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும்  களம் காண்கின்றனர். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு  ஆதரவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விசுவாசம் இல்ல” பாஜகவின் காலில் விழுகிறார் … அசிங்கப்பட்ட EPS …!!

முதல்வர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கே விசுவாசமில்லாத பழனிசாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்கப்போகிறார்? என்று சீமான் அவேசம் அடைந்துள்ளார் . இதுகுறித்து அவர் தெரிவித்த்தில் , தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் காலில் விழுந்து வருகிறார் பழனிச்சாமி. முதலமைச்சர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு விசுவாசமில்லாத பழனிச்சாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்க போகிறார். மக்களின் வாக்கை பெறாதவர் அமைச்சராக முடியாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டெர்லைட் திறந்த மகாராஜா நீங்க தானே” திமுக_வை விளாசிய சீமான் …!!

ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது திமுக தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான் தமிழக மக்களை ஏமாற்றலாம் என திமுக நம்புவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக தான் இருந்தது என்றும் , அப்போது மீட்காத கச்சத்தீவை ஆட்சியில் இல்லாதபோதா மீட்கப் போகின்றது என்று […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

பாரம்பரியம் காக்க…. பூம் பூம் மாட்டிடம் ஆசி…. வைரலாகும் அமைச்சர் வீடியோ…!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீடு இருக்கும் வீதியில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இதை கண்ட அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியே சென்று பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக, இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி டும் டும் மேளம் தட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சொத்தை பாதுகாக்க குடும்ப அரசியல்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

சொத்துக்களை பாதுகாக்கவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.  நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் RB உதயகுமார் அதிமுக ஆட்சியில்தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

”மோடி ஷி ஜின்பிங் சந்திப்பு” தயாராகும் தமிழகம் …..!!

தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கை வரவேற்க தயாராகி வருகிறது. வருகின்ற 11ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாடு வரும் சீன அதிபர் ஜிங்பிங்_கை  வரவேற்பதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வரக்கூடிய சீன அதிபர் 11 , 12, 13 ஆகிய மூன்று நாட்கள் இங்கேயே தங்கி இருக்கிறார். இந்திய சீன நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். 11-ஆம் தேதி சென்னை விமான நிலையம் வரக்கூடிய சீன […]

Categories
அரசியல்

”தேச துரோக வழக்கை இரத்து செய்” பிரதமருக்கு கடிதம் அனுப்பும் விசிக …..!!

பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கை இரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

49 பேர் மீது தேச துரோக வழக்கு ”அதிர்ச்சி அளிக்கிறது” TTV தினகரன் ட்வீட்

பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி  ட்வீட் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு… “எப்படி தேசத் துரோகம் ஆகும்?… ஸ்டாலின் கண்டனம்.!!

இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும்  பிரதமருக்கு கடிதம் எழுதிய புகழ் வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழிசை இல்லனாலும் ”நாங்கள் வளர்ந்துட்டு தான் இருக்கோம்” வானதி கருத்து …!!

தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று அக்கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியளவில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக_வின் பிரதமராக மோடி தேர்வானார். எப்படி தேசியளவில் பாஜக வெற்றி பெற்றதோ அதற்க்கு நேர்மறையாக தமிழகத்தில் பாஜக படு தோல்வி அடைந்தது. தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது.அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை , தேசிய செயலாளர் H. […]

Categories
மாநில செய்திகள்

அடக்குவதற்கு வழக்கா? ”கோபம் தான் வரும்” முஸ்லிம் லீக் வேண்டுகோள் ….!!

மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில் , எங்களின் அன்பான நாட்டில் சமீபகாலமாக பல்வேறு சோக சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்கும் போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை […]

Categories
உலக செய்திகள்

விலை தாங்க முடியல ”வெங்காயமே வேண்டாம்” உத்தரவு போட்ட பிரதமர் …..!!

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தனிப்பட்ட முறையில் தானும் பாதிக்கப்பட்டதாக வங்கதேச பிரதமர் சேக் அசீனா தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் சேக் அசீனா முதல் நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக பகிர்ந்து கொண்டார். மேலும் வெங்காய ஏற்றுமதியை திடீரென இந்தியா எதற்காக நிறுத்தியது என எனக்கு தெரியவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பரப்புரை.!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதற்கட்டமாக நாங்குநேரி தொகுதியில் இன்று  பரப்புரை பயணம் செய்கிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன.  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்… பொன். ராதாகிருஷ்ணன்.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : ஆதரவு தாருங்கள்… பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

 இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தொகுதி : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை.!!  

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி 3… நாங்குநேரி 3… முதல்வர் எடப்பாடி அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்கிறார்.  வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் இரண்டு தொகுதிகளிலும் பரப்புரை செய்யும் நாட்களை திமுக அறிவித்து விட்டது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தல் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு.!!

3 தொகுதி இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், நாம் தமிழர், என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைவரும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றுடன் (30ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மேல் முறையீடு.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக  இன்பதுரை அவசர மேல் முறையீடு செய்துள்ளார்.   கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தேர்தல் வழக்கு…. “தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்”… உயர் நீதிமன்றம் அதிரடி.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும்  எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் வேட்பு மனு ஏற்பு.!!

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது  தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று  அறிவிகப்பட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று இரண்டு தொகுதி வேட்பாளர்களும் வேட்பு மனுதாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்.!!

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஐ.ஐ.டியின் அம்பத்துார் 56 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.ஐநா […]

Categories
மாநில செய்திகள்

“ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சி”…. திருமாவளவன்.!

சென்னை ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி சென்னை ஐஐடி  நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வேற்றோருக்கு பரிசுகளை  வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி,   தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை  இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று பேசி தமிழர்களை பெருமைப்படுத்தி பேசினார். அதுமட்டுமில்லாமல் ஐஐடி பட்டங்களை மாணவ மாணவிகளுக்கு […]

Categories

Tech |