Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மம்தா பானர்ஜி எனக்கு அக்கா” தாதா கங்குலி அதிரடி …!!

பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு எதைக் குறிக்கிறது? முதன்முறையாக நான் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நேரில் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். இது முற்றிலும் மரியாதை நிமித்தமானது. எதிர்காலத்தில் பிசிசிஐ-ல் இருந்து அரசியலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா? (ஒரு சின்ன புன்னகையுடன்) அரசியல் எங்கு தான் இல்லை? இந்தியாவில் மிகவும் முக்கியம் அது! நம் […]

Categories
மாநில செய்திகள்

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…..!!

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் நடத்தும் காத்திருப்பு போராட்டத்துக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயக் கடன்கள் வசூலிப்பதைத் தள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிக்கப்பட்டது.இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சியில் காங்கிரஸ் ”சிக்கிய முதல்வர் மாப்ள” குற்றப்பத்திரிகை தாக்கல் ….!!

ம.பி  முதல்வர் கமல்நாத் மருமகன் ரதுல் பூரி மீதான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மூலம் 354 கோடி ரூபாய் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியை வங்கி மோசடியாளர் என அந்த வங்கி குற்றம் சாட்டியது. இதையடுத்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரதுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பாஜகவுக்கு வாக்களியுங்கள்” வாக்குச் சேகரிப்பில் யோகா குரு…..!!

மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்கும் படி யோக குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். பதஞ்சலி நிறுவனரும், யோக குருவுமான பாபா ராம்தேவ், ஹரியானா மாநிலம் குருகுராமில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான பாஜகவால் தான் மத்தியிலும், மாநிலங்களிலும் நிலையான ஆட்சியைத் தர முடியும். ஒரு நிலையான ஆட்சியே, மக்கள் ஆட்சியாகப் பார்க்கப்படும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, […]

Categories
தேசிய செய்திகள்

”மக்கள் சேவையில் ஈடுபட்ட அரசு நிறுவனம்” சீரழிந்திருக்கக் கூடாது….!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்., 24ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன், நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம்’ (SAVE BSNL FORUM) என்ற அமைப்பின் கீழ், நாங்கள் 10 சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு தழுவிய அளவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களை நடத்த முடிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆஹா.! அற்புதம் …. ”வளைக்கப்பட்ட பஞ்சமி நிலம்” ஸ்டாலினை சீண்டிய ராமதாஸ் ….!!

முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட PMK ங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் […]

Categories
அரசியல்

”உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி” கருணாஸ் பரபரப்பு பேட்டி …!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்படாமல் இருந்து வரும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மும்மரமாக செய்து வருகின்றது. இதற்கான அடைந்து நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது . அனைவரின் எதிர்பார்ப்பாக டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போட்டோ மட்டும் தான்… ”சம்மந்தமே இல்லாதவர்கள்” ….. சீமானை கலாய்த்த கருணாஸ் ….!!

இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்று சீமானை விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ”சம்பளத்துடன் பொதுவிடுமுறை” அரசானை வெளியீடு ….!!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மோடி திட்டம் சாம்பலாகி விடுகிறது” தா. பாண்டியன் விமர்சனம் …!!

வெடி வெடித்தவுடன் எப்படி சாம்பலாகிறதோ, அதுபோல மோடி போடும் திட்டமும் சாம்பலாகிவிடுகிறது  என்று தா.பாண்டியன் விமர்சித்தார். ஆண்டுதோறும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடு குறித்தும் பரிசீலித்த பின் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இந்த பரிசை அறிவித்து வருகின்றனர். அதன்படி 2019-ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அசுரனை பார்த்த ஸ்டாலின்…… அசந்து போன தனுஷ்….!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை குவித்து வருகிறது. அந்த வகையில் அசுரன் படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் திரைப்பட கலைஞர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் அசுரன் […]

Categories
மாநில செய்திகள்

”பேனர் வழக்கில் ஜாமீன் கொடுங்க” விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் …!!

பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.24க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T  ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அதிமுக நிலைத்து நிற்கும்’ அமைச்சர் ஜெயக்குமார் கருத்து ….!!

ஜெயலலிதா கூறியபடி உலகம் உள்ளவரை அதிமுக நிலைத்து நிற்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 48 ஆவது ஆண்டு விழா அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுகவும் , ஊழலும் மூன்றெழுத்து” அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் …!!

திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து  என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சீமானை மக்கள் புறக்கணிப்பாளர்கள்’ -அமைச்சர் கடம்பூர் ராஜூ …!!

சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை, மக்களால் அவர் புறக்கணிக்கப்படுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வாய்க்கு வந்தத பேசாதீங்க” நடவடிக்கை எடுக்கப்படும் – சீமானுக்கு எச்சரிக்கை …!!

சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது , அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 48 ….. ”M.G.R , ஜெயலலிதா சிலைக்கு மரியாதை” OPS – EPS பங்கேற்பு …!!

அதிமுகவின் 48_ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு MGR மற்றும் ஜெயலலிதா திருஉருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். 48 ஆவது ஆண்டு விழா அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து […]

Categories
அரசியல்

அசுரன் படம் அல்ல பாடம்…… வெற்றிமாறன் ,தனுஷுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து….!!

அசுரன் படத்தை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அதிகம்  பகிரப்பட்டு வருகிறது . தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இது தமிழருக்கானது ….. ”பிரிவினையை ஏற்படுத்தாதீங்க”….. அமைச்சர் பாண்டியராஜன் …!!

கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் தான், இதை வைத்து பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தனியார் அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து கொத்தடிமைகளாக பணியாற்றிய 1200 பேரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் கொத்தடிமை முறையை […]

Categories
தேசிய செய்திகள்

ராம ஜென்ம பூமி வழக்கு கடந்துவந்த பாதை…!

அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]

Categories
உலக செய்திகள்

”வறுமையில் இருந்து மீண்டெழும் இந்தியா” உலக வங்கி தகவல் …..!!

1990-களிலிருந்து இந்தியாவின் வறுமை நிலையின் குறியீடு, ஏழு விழுக்காடு வரை வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டிலிருந்து கணக்கீடு செய்து பார்க்கையில், இந்தியா வறுமை நிலையில் ஏழு விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் இது 15 ஆண்டின் சராசரி அளவை பொறுத்தமட்டில் பாதியாகக் குறைந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த வளர்ச்சியானது மனித மேம்பாட்டில் இந்தியா வலுவான முன்னேற்றங்களைக் கண்டதினால் நிகழ்ந்துள்ளது என உலக வங்கி விளக்கியுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவின் […]

Categories
அரசியல்

”என்னைப் பார்த்து சிரித்தார்” OPS முதல்வர் பதவியே போச்சு – முக.ஸ்டாலின் …!!

ஓ. பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து சிரித்ததால்தான் அவருக்கு முதலமைச்சர் பதவி பறிபோனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.இதையடுத்து அவர் பரப்புரையில் பேசியதாவது, “முதலமைச்சர் மனுக்களை வாங்கி ஒன்றும் செய்யவில்லை. எனவேதான் நான் மக்களிடம் மனுக்களை வாங்குகின்றேன். நாங்கள் அதிகாரத்தில் இல்லை, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உறுதியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதிமுகவினர் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பூனை அல்ல புலி ….”போகப் போக காட்டுறேன்”…. MGR பாடலுடன் TTV அறிக்கை …!!

அதிமுக உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு அமமுக பொது செயலாளர் TTV.தினகரன் 3 பக்க அறிக்கை வெளியிடட்டுள்ளார். நாளை தினம் அதிமுக உருவாக்கப்பட்ட நாள் அதாவது 1972_ஆம் ஆண்டு அக்டோபர் 17_ஆம் நாள் MGR அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். 48_ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் TTV தினகரன் தொண்டர்களுக்கு 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் , தந்தை பெரியாரின் வழியில் பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கத்தை சுயநலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அண்ணன் பேச்சை கேட்பேன்” சரணடைந்த சீமான் ….!!

அண்ணன் திருமாவளவன் பேச்சை நான் கேட்பேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாக்கை மடக்கி பேசுங்க ….. ”நாக்குக்கு ஆபத்து”….. சீமானுக்கு எச்சரிக்கை ….!!

சீமான் நாக்கை மடக்கி பேச வேண்டும் இல்லையென்றால் நாக்குக்கு ஆபத்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிர்ச்சியில் நாம் தமிழர் ”சீமானின் முகத்திரை கிழிப்பு” புலிகள் பரபரப்பு அறிக்கை …..!!

ராஜிவ் காந்தி படுகொலையில்எங்களுக்கும் தொடர்பு இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேப்டன் வந்தாச்சு ….. ”தேமுதிக அதிரடி அறிக்கை”….. மகிழ்ச்சியில் அதிமுக …!!

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ப.சிதம்பரம் சிறையில் கைது” வச்சு செஞ்ச அமலாக்கத்துறை …!!

டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டெல்லியில் இருக்கக்கூடிய ப.சிதம்பரத்தின் இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.இதனையடுத்து தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது , குறிப்பாக 500க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளையுடன் அவருடைய நீதிமன்ற காவல் நிறைவடைகிறது.இந்த வார இறுதிக்குள் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மீது குற்றப்பத்திரிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏம்பா…!! இவ்வளோ நேரம் நிக்குற ….. உனக்கு கால் வலிக்காதா ? முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி …!!

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றார். அதில் அவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடையே பேசும் போது , திமுக ஆட்சி காலத்தில் நான்   உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது மகளிர் சுயஉதவிக்குழு என்னுடைய துறையில் இருந்தது. அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சீமான் இப்படி பேசாதீங்க” தனிமைப்பட்டு போவீங்க – அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் …!!

 ராஜிவ் காந்தி குறித்து கூறிய கருத்தினை சீமான் தவிர்த்திருக்கலாம் என்றும்  சீமான்தான் தனிமைப்பட்டு போவார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வந்தாரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு அனைத்து மக்களும் வாழும் அமைதிப் […]

Categories
விளையாட்டு

”2021_இல் முதல்வராகும் கங்குலி” பாஜகவின் பக்கா பிளான் ….!!

உள் துறை அமைச்சர் அமித் ஷாவை கங்குலி சந்தித்தைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளார் என செய்திகள் வலம்வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்த கங்குலி, “அமித் ஷாவை முதன் முதலில் சந்தித்தேன். பிசிசிஐ தலைவர் தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை …!!

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலன்று காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதுமட்டுமின்றி 17 மாநிலங்களில் காலியாகவுள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.இதையடுத்து அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை (அதாவது வாக்குப்பதிவு நிறைவடையும் வரை) எவ்வித கருத்துக் கணிப்புகளும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் […]

Categories
தேசிய செய்திகள்

”தேச பாதுகாப்பே முக்கியம்” பரப்புரையில் கர்ஜித்த மோடி ….!!

தேர்தல்கள் வரும், போகும் ஆனால் தேசிய பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநில தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள குருசேத்திரா நகரில் நடந்த தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டார். அப்போது அவர், “ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லையா? நம் நாடு வலிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெங்காய வெடி வாங்க முடியுமா ? ”தகுதியற்றவர் சீமான்” கராத்தே தியாகராஜன் கருத்து …!!

வெங்காய வெடி கூட வாங்க தகுதி இல்லாதவர் சீமான் என்று காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், சீமான் தனது பேச்சால் தமிழகத்தில் எங்குமே நடமாட முடியாது என்றும், இந்த விவகாரத்தில் எதிர்வினை ஆற்றாமல் தமிழ்நாடு காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சீமான் வெங்காய வெடி கூட வாங்க தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த தேர்தல் வந்தாலும்….. ”அதிமுக வெற்றி நிச்சயம்”…. OPS உறுதி …!!

நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் O.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொழுப்புத்தனமான பேச்சு….. ”வாடகை கொடுக்க வக்கில்லை” சீமானை வெளுத்த அமைச்சர் ..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து கொழுப்புத்தனமான பேச்சு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டித்துள்ளார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது முட்டாள்தனமான மடத்தனமான வார்த்தை என்றார். தமிழன் எதிரிக்கு கூட துரோகம் இழைக்காதவன். ராஜீவ் காந்தியின் கொலை தமிழக மண்ணில் நடந்ததையே கேவலமாகக் கருதுபவர்கள் தமிழக மக்கள். அப்படியிருக்கையில் ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”பிரதமர் மோடியுடன் தீடிர் சந்திப்பு” நினைவு பரிசு , சால்வை அணுவித்த தமிழிசை …!!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழகத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார் . இவர் தமிழகத்தில் ஒரு சிறந்த பெண் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்து வந்ததோடு பாரதீய ஜனதா கட்சியை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 3,48,503 பேருக்கு….. ”ரூ 8,4000 முதல் ரூ 16,000” இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு …!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை  சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு  சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் 20 %  போனஸ் […]

Categories
மாநில செய்திகள்

”காவல்துறையை சீர்திருத்தம் செய்க” விசாரணை ஒத்திவைப்பு ….!!

காவல் துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், இதுவரை எடுக்கப்பட்ட காவல் துறை சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசும், காவல்துறை இயக்குநரும் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி தாக்கல் செய்த பதில்மனுவில், காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மறைந்த தலைவர்களை பேசாதீங்க” சீமானுக்கு G.K வாசன் அட்வைஸ் …!!

மறைந்த தலைவர்களை அவதூறாகப் பேசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘மறைந்த தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசுவது ஒரு போதும் ஏற்கக்கூடியது அல்ல, அது தவிர்க்கப்பட வேண்டும். அது பயங்கரவாதம், தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும், அடக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாங்குநேரி அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களை வாட்டி வதைக்கும் டெங்கு…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 47 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்…… பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்….!!

உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டிர்கள் என்று சுப ஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதால் அவர் உடல் நசுங்கி பலியானார். இதையயடுத்து பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ..!! பாவம் …. நாளை உத்தரவு…. ”வெளியே வந்துட கூடாது” ப.சி-க்கு எதிராக ஸ்கெட்ச் …!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டு 50 நாட்களை கடந்தும் திகார் சிறையில் இருக்கக் கூடிய  நிலையில் இன்று அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படடர். அப்போது ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை சார்பில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதற்க்கு சிபிஐ சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

Breaking : ரவிச்சந்திரன் பரோல் : பரிசீலிக்க உத்தரவு ……!!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது. விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த  ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  தனது மகன் ரவிச்சந்திரன்  27 ஆண்டுகளாக சிறையில்இருக்கிறார். இவர் நான்கு முறை மட்டுமே பரோலில் வந்துள்ளார். குறிப்பாக ஏழு ஆண்டுகள் , 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் ஒருவர் முன்கூட்டியே விடுவிக்க […]

Categories
அரசியல்

”எல்லாமே திமுக தான்” கருத்துக்கணிப்பில் அரண்டு போன அதிமுக …..!!

நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே 3 தொகுதிகளிலும் வெற்றிபெறுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமானுக்கு சங்கு ….. ”ஆப்பு வைக்கும் தேர்தல் ஆணையம்”…. விரிவான அறிக்கை …!!

சீமானின் சர்சை கருத்து குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை கேட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
மாநில செய்திகள்

மருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …!!

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T  ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …!!

சீமானின் சர்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……!!

ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை காவல்துறை கைது செய்ய வேண்டுமென்று H.ராஜா தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” […]

Categories
தேசிய செய்திகள்

டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….!!

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஜாமீன் மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த டி.கே.சிவக்குமார் வீடுகளில் 2017ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.முறைகேடான பணப் பறிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். 4ஆவது நாள் […]

Categories

Tech |