ஸ்டாலின் நாக்கில் சனி இருப்பதால்தான் அனைத்தையும் தவறாகவே பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். காவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் என்ற ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், […]
