காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடும் எதிர்ப்புக்கிடையே நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், காஷ்மீர் பதற்றமாக இருக்கிறது, அங்குள்ள தலைவர்களை எப்போது விடுதலை செய்வீர்கள் என மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு […]
