Categories
மாநில செய்திகள்

“ஸ்டாலினும், மம்தாவும் மக்களை கசக்கி எறிவார்கள்”…. பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!!

அரசியல் லாபத்துக்காக மக்களை பயன்படுத்திவிட்டு கசக்கி எறிவதை ஸ்டாலினும், மம்தாவும் கையாண்டுவருவதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தனி பெரும்பான்மை கட்சியாக பாஜக வராவிட்டாலும் அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக ஜார்கண்டில் நிலைபெற்றுள்ளது. தேர்தல் அந்தந்த மாநிலத்தின் நிர்வாகங்களை அடிப்படையாகக்கொண்டது. கூட்டணி சரியாக அமையவில்லையென்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரால் …… ”நாங்கள் வீரமாக இருக்கிறோம்” நெகிழ்ச்சியில் அமைச்சர் …!!

MGR_ஆல் தான் இன்று நாங்கள் வீரத்தோடு இருக்கின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் கொண்டார். அதிமுகவின் நிறுவனரும் , தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான MGR_யின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருகின்றது. மாநிலம் முழுவதும் உள்ள அதிமுகவினர் இதனை மலர் தூவி  அனுசரித்து வருகின்றனர். அதிமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும்  நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , […]

Categories
அரசியல்

”அந்த பயம் இருக்கணும்”துப்பாக்கி விஜய் ஸ்டைலில் முக.ஸ்டாலின் …!!

பெரியார் குறித்த பாஜகவின் சர்சை பதிவு நீக்கத்திற்கு முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பெரியாரின் நினைவு  தினமான இன்று தமிழக அரசியல் தலைவர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் பெரியாரை இழிவுபடுத்தி பாஜக தனது ட்வீட்_டர் பக்கத்தில் சர்சைக்குரிய பதிவிட்டு , அதற்க்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதனை தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. இதனைதொடர்ந்து  திமுக தலைவர் முக .ஸ்டாலின் அந்த பயம் இருக்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளதில் , #Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ஆம் தேதி தொடங்குகிறது.!!

 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது  தமிழகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் காலை 10 தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்த உள்ளார்.  கடந்த ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கூட்டத்தொடரை எத்தனை நாள் நடந்தது என்பது […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியார் 46ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை..!!

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திராவிட இயக்கத்தின் பிதாமகன், சமதர்ம சமத்துவ அரசியல் தமிழ்நாட்டில் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டவர் என்றெல்லாம் தமிழர்களால் கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை சிம்சனில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் பரப்புரை..!!

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் விஜய் கணேஷ், சித்திரகுப்தன், கிளிமூக்கு ராஜேந்திரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காமெடி நடிகர் கிளிமூக்கு ராஜேந்திரன், ‘நாங்கள் எல்லாம் தற்போது உங்களிடம் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்துள்ளோம். நீங்கள் தவறான ஆட்களுக்கு ஓட்டுப் போட்டால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன ஆச்சு தலைவரே…? எதிர்த்து பிரச்சாரம் செய்யுறீங்க….. அதிமுகவுக்கு வந்த சோதனை …!!

அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தது கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அகில இந்திய அளவில் மக்கள் தொடர்பு இயக்கம், மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்க இருக்கிறது. இந்த விழிப்புணர்வு […]

Categories
மாநில செய்திகள்

உலக நாயகனே..!… ”உனக்கு என்ன தெரியும்” கிழித்து தொங்க விட்ட H.ராஜா ….!!

நடிகர் கமல்ஹாசன் உலகநாயகன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, உலக அறிவும் வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாஜக ஆட்சியில் தான் இலங்கை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இலங்கை அகதிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்ள ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் சார்பாக டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவை பின்தொடரும் ஜார்க்கண்ட்; தேர்தல் முடிவுகளில் இழுபறி!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவருகிறது. ஆளும் பாஜகவுக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 40 […]

Categories
தேசிய செய்திகள்

“குடியுரிமை மசோதா” 110 கேமராக்களுடன்….. 1000க்கும் மேற்பட்டோரின் முழக்கங்களுடன்…… பிரம்மாண்ட பேரணி தொடக்கம்…..!!

சென்னையில்  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட இருக்கும் பிரம்மாண்ட பேரணி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக், காங்கிரஸ்  கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்யும்விதமாக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனை அடுத்த கட்டத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல்” – ராஜேந்திர பாலாஜி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய்யான வதந்தியை ஏற்படுத்துவது தீவிரவாதத்தை வளர்க்கின்ற செயல் என்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்துக் காலங்களிலும் அதிமுக அரசு தொடர வேண்டும் என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலிலும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 2,00,000 கடன் இரத்து….. முதல்வர் அதிரடி ….. விவசாயிகள் மகிழ்ச்சி …!!

மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் அதிகளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் மகாராஷ்டிரா. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ விஷ விதைகளை விதைக்கிறார் ஸ்டாலின்’ – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்.!!

மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டில் விஷ விதைகளை விதைக்கும் சதி வேலையில் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருங்காலத்தில் அண்ணாவின் பெயரும் நீக்கப்படும் என்று ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர், “குறுகிய எண்ணம் படைத்தவர்களுக்குத்தான் இது போன்ற குறுகிய சிந்தனைகள் ஏற்படும். ஸ்டாலினின் கவலை எல்லாம் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முன்னிலைப்படுத்திவிட வேண்டும் என்பதுதான், நாங்கள் எப்போதும் அண்ணாவின் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம்: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இணை ஆணையர் அலோக் குமார், “மத்திய ஆயுத காவல்படை வீரர்கள் வடகிழக்கு மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எந்த சூழ்நிலை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கு எங்களிடம் படை உள்ளது” என்றார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களே..!… எல்லாரும் வாங்க….. மக்களை காப்பாத்துங்க…… ஸ்டாலின் தீடிர் அழைப்பு …!!

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் நடிகர்களை பங்கேற்க முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக பேரணி நடத்த இருக்கின்றது. இதற்காக கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பேரணியில் பங்கேற்க நடிகர்களுக்கு திமுக சார்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு ரூ 1000 கிடையாது….. தடை கேட்டு வழக்கு …..!!

பொங்கலுக்கு 1000 வழங்குவதற்கு தடைகேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைவருக்கும் கரும்பு தூண்டு , அரிசி , பருப்பு , பணம் ரூ  1000 வழக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் , திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அலமேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பொங்கலுக்கு அரசு வழங்கும் 1000 ரூபாய் பரிசு பெட்டகத்தை தேர்தல் முடியும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திக்…. திக்….. அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல கூலிப்படை …..!!

தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவு..!!

 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் உட்பட  பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 27 மாவட்டங்களில் மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

27 மாவட்டங்களில்… 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல்… தமிழக தேர்தல் ஆணையம்..!!

27 மாவட்டங்களில் மொத்தம் 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் நேற்று மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். […]

Categories
அரசியல் சென்னை தலைவர்கள் மாவட்ட செய்திகள்

இன்று டெல்லி செல்லவிருக்கிறார் ஓபிஎஸ்: இதான் காரணமாம்..!

  சென்னை: அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்ல இருக்கிறார். அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள நிதி, புதிய திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து கோரிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி ..!!

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அதிக அளவில் வேட்பாளர்கள் வந்திருந்தனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.   பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளாட்சித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கட்சி ஆரம்பிப்பது கடினம் தான்”… ரஜினியை சீண்டும் அமைச்சர் ஜெயக்குமார்..!!

ரஜினி கட்சி ஆரம்பிப்பது கடினம்தான் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னதையடுத்து அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ரஜினி அவ்வப்போது அரசியல் சமூகம் குறித்து கருத்துகளையும் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில்,  ரஜினி கட்சி ஆரம்பிப்பது கடினம்தான் என்றார். மேலும் அவரது நடவடிக்கை சந்தேகமாகவே உள்ளது. தமிழகத்தில் அதிமுகவை மீறிய சக்தி எதுவுமில்லை. திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள்……. OPS EPS அறிவிப்பு…..!!

உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்களை EPS, OPS கூட்டாக இணைந்து அமைத்துள்ளனர்.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக அதிமுக தலைமை தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன. தற்போது அதிமுக தலைமையில் ஆலோசிக்கப்பட்டு மாவட்ட வாரியாக 38 பணி குழுக்களை […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டரில் கலக்கிய டிரம்ப்…… படைத்தார் புதிய சாதனை….!!!!

2 மணி நேரத்திற்குள் 123 பதிவுகளை வெளியிட்டு அதிபர் டிரம்ப், டுவிட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.   முக்கிய சமூக வலைத்தளமாக இருக்கும் டுவிட்டரை அதிகம் உபயோகபடுத்தும் உலக தலைவர்களில் அமெரிகாவின் குடியரசுத்தலைவர் டிரம்ப் முக்கியமானவர். தன்னுடைய ஆட்சியில் அரசு எடுக்கும் புதிய திட்டங்கள், தினசரி அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் சில முக்கியமான முடிவுகளை டிரம்ப் டுவிட்டரில்தான் வெளியிடுவார்.   இந்த நிலையில் 2 மணி நேரத்திற்குள் நூற்று இருபத்து மூன்று பதிவுகளை வெளியிட்டு அதிபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்- 5 மாவட்டங்களுக்கு கண்காணிப்பாளர் நியமனம்…!!

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்க பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளாராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, நாகப்பட்டின மாவட்டத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டம் இயற்றக்கூடிய இடத்தில் பெண்கள்- எம்.பி. கனிமொழி பேச்சு..!!

பெண்கள் சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி அவர்கள் கூறியுள்ளார். திமுக எம்.பி. கனிமொழி சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் சென்னையை பெண்களுக்கான பாதுகாப்பான நகரமாக ஆக்குவோம் என்ற தலைப்பில் அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பெண்கள் எந்த சூழ்நிலையிலும் காரணமில்லை என்பதை புரிந்துக்கொண்டு தைரியமாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

“சமஸ்கிருதம் vs தமிழ்” தமிழை மத்திய அரசு மதிக்கிறதா…? திருமாவளவன் கேள்வி…..!!

தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம்  அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ் உள்ளிட்ட  பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலிறுத்தி பேசியுள்ளார். அதில், வரி வடிவங்களில் ஒன்று சமஸ்கிரத என்பது  வரலாற்று உண்மை. அதற்கு தொன்மை இருக்கிறது. ஆனால் வரிவடிவம் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அப்படி வரிவடிவம் இல்லாத மொழி தேவ நாகரீகம் என்ற எழுத்தை கடன் வாங்கி தான் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா..!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

“RAPE IN INDIA” ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு…….. பாராளுமன்ற அவை ஒத்திவைப்பு….!!

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சால் பாராளுமன்ற அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 18ஆம் தேதி தொடங்கப்பட்ட பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நிறைவேற்றப்படாத பல மசோதாக்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி இந்திய பெண்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக கூறி பாஜக எம்பிக்களான  ஆன ஸ்மிரிதி இராணி லாலா சாட்டர்ஜி ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் ராகுல் காந்தி மீது வைத்த […]

Categories
தேசிய செய்திகள்

வெங்காய விலை உயர்வுக்கு காரணம்…உற்பத்தி குறைவே…!!! – மத்திய அரசு

வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேநேரம் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அயல்நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பபடும் வெங்காயம், தமிழ்நாடு உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1,200 செல்போன்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை ….!!

ரூ.1200 விலை கொண்ட அடிப்படை செல்போன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க உற்பத்தியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரூ.1200 ரக செல்போன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வகை கைபேசிகளின் மதிப்பு பங்கு சுமார் ரூ .12,000 முதல் ரூ.15,000 கோடியாக உள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

முடிந்தது பேரறிவாளனின் பரோல்… மீண்டும் கிடைக்குமா?

பேரறிவாளனின் ஒரு மாதம் பரோல் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், நாளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஒரு மாத கால பரோல் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, நாளை காலை 10 மணிக்கு பேரறிவளானின் வீட்டிலிருந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது கணவர் குயில்தாசனின் […]

Categories
தேசிய செய்திகள்

நீதி எவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது?

நம் நாட்டில் உள்ள விரைவு நீதிமன்றங்களில் நீதி எவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது என பார்க்கலாம். விரைவு நீதிமன்றங்கள் 2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்டது. கீழைமை நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. விரைவான நீதியை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்களில் பல வழக்குகள் தற்போது தேங்கி நிற்கின்றன.வழக்குகளில் நீதி வழங்க பத்து ஆண்டுகள் வரை ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிஜம். சமீபத்தில் ‘திஷா’ வழக்கில் ஒரு விரைவு நீதிமன்றத்தை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஜார்கண்ட் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல்: 3 ஆம் கட்ட வாக்குபதிவு தற்போது தொடங்கியது. ஜர்காண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைப்பெற்று வருகின்றன. இன்று 17 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட வாக்குபதிவு தொடங்கியுள்ளது. இதில் 12 தொகுதிகள் மாவேஸ்யிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

#CAB2019 இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் – மோடி ட்வீட்

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது தேசத்தின் சகோதரத்துவத்தை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாமல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள், பௌத்தர்கள் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் புலம் பெயர்ந்தோர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு 105 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், […]

Categories
Uncategorized

வெங்காய விலை உயர்வு… “பெரிய மண்டி முதலாளிகளே காரணம்”- அன்புமணி குற்றச்சாட்டு..!!

பெரிய மண்டி முதலாளிகள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக வெங்காய விலை உயர்வை ஏற்படுத்தியிருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வெங்காய விலை உயர்வுக்கு காரணம் பெரிய மண்டி முதலாளிகள். அவர்கள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக விலையை உயர்த்தி இருக்கிறார்கள். வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்ததால் வெங்காய உற்பத்தி பாதித்துள்ளது. முன்னதாகவே மத்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ராஜினமா..!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கே.சி. வேணுகோபால் ராஜினமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் கே.சி. வேணுகோபால். இவர் தனது பதவியை இன்று (டிச.11) ராஜினாமா செய்தார். இதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அளித்துள்ளார். அண்மையில் நடந்த கர்நாடக இடைத்தேர்தலின் முடிவுகள், நேற்று முன் தினம் (டிச.9) வெளியாகின. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை ….!!

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது” ப.சிதம்பரம்  விமர்சனம் ….!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

”குறுகிய மனம், வெறுப்புணர்வை இந்தியா நேசிக்கிறது” பிரியங்கா காந்தி விமர்சனம் …!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் குறுகிய மனம், வெறுப்புணர்வு ஆகியவற்றையே இந்தியா நேசித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்: ராகுல் விமர்சனம் …!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதிய திமுக எம்பி வில்சன்: பதிலளித்த மத்திய அமைச்சர்!

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன் கடிதம் எழுதியுள்ளார். பி. வில்சன் மத்திய அமைச்சருக்கு எழுதிய அக்கடிதத்தில், ”இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (ஓபிசி) மருத்துவச் சேர்க்கையில் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ) ஆகியவற்றில் அகில இந்திய இடஒதுக்கீட்டு முறை நடைமுறையிலுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

2000ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்கும் -மத்திய அரசு திட்டவட்டம்..!!

யாரும் கவலைப்பட தேவையில்லை ரூ. 2,000  நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். மத்திய அரசு அறிவிப்பு. பிரதமர் மோடி, தனது முந்தைய ஆட்சியில், 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி 1,000 ரூபாய்  மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு எழுந்தது. அதைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகளை  ரிசர்வ் வங்கி வெளியிட்டது.தற்போது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களுக்கு எதிரான வன்முறை அடிப்படை உரிமைகளின் தோல்வி – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பது அடிப்படை உரிமைகள் தோல்விடைவதைக் காட்டுகிறது எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாராட்டி பேசிய அவர், “கால் நூற்றாண்டு காலமாகக் கண்காணிப்பு அமைப்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டுவருகிறது. எதிர்பார்த்ததைவிட பாரபட்சமின்றியும் அச்சமின்றியும் அது […]

Categories
தேசிய செய்திகள்

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

 அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து, மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தொலைத் தொடர்பு வசதிகள், இணைய வசதிகள் என அனைத்தும் முடக்கப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக மனித […]

Categories
தேசிய செய்திகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2.0 ? – மத்திய அமைச்சர் பதில்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது குறித்து கவலைப்பட தேவையில்லை என மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த விஷம்பர் பிரசாத் நிஷாத், ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளால் கருப்பு பணம் அதிகரித்துள்ளது. இதனால், 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 1000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவிவருகிறது’ என […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல்!

குடியரிமை சட்டதிருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள் பல்சுவை

ஜாகுவார் லேண்ட் ரோவர் காரின் விற்பனை சரிவு!

சொகுசு கார் நிறுவனமான ஜாக்குவார் லேண்ட் ரோவரின் விற்பனை 3.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜாகுவார் நிறுவனம், அக்டோபர் மாத விற்பனையில் ஆறு சதவிகிதம் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, சீனாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் விற்பனை உயரும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்க கருத்து – இந்தியா கடும் கண்டனம்

குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என்றும் ஆதாரமற்றது எனவும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து அமெரிக்கவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் வெளியிட்டிருந்த கண்டன அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் (United States Commission on International Religious […]

Categories

Tech |