Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – காவல்துறையிடம் டிஎன்பிஎஸ்சி புகார் ..!!

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை கொடுத்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் TNPSC […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – சிபிஐ_க்கு நோட்டீஸ் …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை CBCIDI விசாரணையில் இருந்து சிபிஐ_க்கு மாற்றுவது கோரிய வழக்கில் சிபிஐ_க்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்பீக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம் , கீழக்கரை  தேர்வு மையத்தில் தேர்வெழுதிய முதல் 100 இடங்களில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் – டிஆர் பாலு

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நடைபெறும் விவாதத்தில் சிஏஏ-தொடர்பாக திமுக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும். பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்கிரஸ் எம்எல்ஏவை தகுதிநீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா மனு

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மீது அரசு கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு தவறான கருத்தைக் கூறிவருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜாமியா பல்கலை துப்பாக்கிச் சூடு : ப.சிதம்பரம் கண்டனம்..!!

டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மாணவர்கள் நேற்று ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே அங்கே வந்த மர்மநபர் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டுள்ளார். இதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல்..!!

குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக விளங்கியவராகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி, மதுரவாயல் வட்டாச்சியர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன் 78,300 ஊழியர்களுக்கு ஓய்வு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வரலாறு காணாத அளவு  ஒரே நாளில் 78,300 பேர் ஓய்வு பெறவுள்ளனர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை மீட்க, இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டத்திற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை டிசம்பர் 3ஆம் தேதி வரை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,300 பேரும், […]

Categories
மாநில செய்திகள்

சிக்குவாரா ஜெயக்குமார் ? ”துப்புக் கொடுத்தால் துட்டு” பொறி வைத்த சிபிசிஐடி …!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க CBCID போலீசார் சன்மானம் அறிவித்துள்ளனர்.  குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் இந்த சோதனையில் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

லேப்டாப்… பெண்டிரைவ் … 60 பேணா … அள்ளிச் சென்ற CBCID … ஆதாரம் சிக்கியது ….!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – ”துப்புக்கொடுத்தால் சன்மானம்” CBCID அதிரடி ….!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மனித சங்கிலியின் ஒரு பகுதியாக சென்னையில் 40 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட இம்மனித சங்கிலியில் தமிழகத்தின் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்., எம்.எல்.ஏ-வை தகுதிநீக்கம் செய்ய காங்., எம்.எல்.ஏக்கள் போர்கொடி!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களே கடிதம் அளித்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஊர்வலமாகச் சென்று துணைநிலை ஆளுநரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினார். இச்சூழலில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் மகனா? சகோதரானா? பயங்கரவாதியா ? மக்கள் முடிவு செய்வர்கள் – கெஜ்ரிவால்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முறைகேடு: தொடரும் சிபிசிஐடி விசாரணை …!!

சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், கொரியர் நிறுவன ஊழியர்கள் என மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டை அடுத்து அதில் தொடர்புடைய 14 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலையடுத்து அதில் தொடர்புடைய சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சித்தாண்டியை சிபிசிஐடி அலுவலர்கள் தேடிவருகின்றனர். இந்நிலையில், சித்தாண்டியின் சகோதரரும் சிவகங்கையைச் சேர்ந்த சார்பு பதிவாளருமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : எம்ஜிஆர் பாடலைப் பாடி பதிலளித்த அமைச்சர் …!!

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நாகப்பட்டினத்தில் மண் பரிசோதனை நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மண் பரிசோதனை நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியணிடம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் : பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை ….!!

சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு : தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் – திருமா வேண்டுகோள்..!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திமுக போராட்டத்தில் தொண்டர்கள் இருவர் தீ குளிக்க முயற்சி … கோவில்பட்டியில் பரபரப்பு..!!

தூத்துக்குடிமாவட்டம்  கோவில்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிகமான கவுன்சிலர் வைத்து இருந்த நிலையிலும் ஒன்றியத் தலைவராக அதிமுகவை தேர்வு செய்தது. இந்த தேர்தலில் முறைகேடாக அதிமுகவை தேர்வு செய்ததாக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும்  திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன்  தலைமையில் திமுகவினர் நான்குமணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற கொண்டிருந்த போது  திடீரென்று  திமுக தொண்டர்கள்  லட்சுமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் […]

Categories
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்..!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு : விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிப்பு..!!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப் 4 தேர்வில் 5 விதமான விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிகப்பட்டுள்ளது  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 5 , 8 பொதுத்தேர்வு – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தப்படுமா ?  அல்லது வேறு பள்ளிகளில்  திருத்தப்படும் என்பது பரிசீலனையில் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்   இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு….!!

ஜாமியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கே வந்த மர்மநபர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு மாணவர்கள் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் ? என்ன […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது- TNPSC விளக்கம் …!!

குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து தேர்வு இரத்து செய்யப்படாது என்று TNPSC விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள்.இதில் 100 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்ததாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைகேட்டுக்கு தொடர்பான அதிகாரிகள் அடுத்தடுத்து கைதாகி தமிழகம் பரபரப்புக்குளாகி இருந்தது.இதனால் மற்ற தேர்வர்களும் கலக்கம் அடைந்தனர். முறைகேட்டால் எங்களுடைய தேர்வு ஏற்றுக்கொள்ளப்படுமா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – ஜெயக்குமார் வீட்டில் சோதனை …!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேர்ரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் தற்போது சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள். முகப்பேர் கவிமணி சாலையில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு : மருத்துவமனையில் சித்தாண்டி ?

குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 முறைகேடு  தொடர்பாக காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலர் சித்தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. ஆயுதப் படையில் பணியாற்றி வரும் சித்தாண்டி தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார். சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு : TNPSC ஊழியர்களிடம் விசாரணை ….!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக TNPSC ஊழியர்களிடம் CBCID போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 முறைகேடு டிஎன்பிஎஸ்சி ஊழியர்களிடம் விசாரணை குரூப் ஃபோர் முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மூன்று பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது.குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேரை CBCID காவல்துறை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறது . இந்த முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தற்போது தேர்வாணையத்தில் பணியாற்றக் கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மதத்தை அளவுகோலாக வைக்கும் பாஜக”திருமாவளவன் ஆவேசம் …!!

மதத்தை அளவுகோலாக வைத்திருக்கிறது பாஜக அரசு என்று திருமாவளவன்  ஆவேஷமாக தெரிவித்துள்ளார். திருமாவளவன் பேசுகையில்  , சிஐஏ எதிர்ப்பதற்கு முக்கியமான காரணம் மதத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த சட்டம் இயக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த ஒரு யுத்தியாகவே இதை கையாளுகிறது பிஜேபி. இதுவரை எந்த அரசும் , எந்த காலத்திலும் மதத்தை ஒரு அளவுகோலாக யாரும் கையாண்டது இல்லை. அகதிகளாக வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

‘மோடி 2.0’ அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்: பட்ஜெட் 2020இல் அதைச் செய்யுங்க ஃபர்ஸ்ட்!

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வழங்கியுள்ளார். இந்தியப் பொருளாதாரம் தள்ளாடும் நிலையில், மத்திய அரசு வருவாயை அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்குமா கேள்வி நிலவிவருகிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய சிறப்பு கட்டுரை இதோ… வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ போராட்டத்தில் சர்ச்சை பேச்சு; உ.பி. மருத்துவர் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அலிகர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்ளே வராதீங்க ….. ”அமித்ஷா_க்கு ஸ்கெட்ச்” ஆட்டம் காட்டும் ஆம் ஆத்மி ….!!

அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடிதம் எழுதியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கும் என கனிமொழி எம்பி தெரிவித்தார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் – காங். வலியுறுத்தல்

வரும் நிடுநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சருமான பிரித்விராஜ் சவான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று பாஜக வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர வேண்டுமெனில் அத்துறையின் ஆண்டு வருமானம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி 2020: ஆம் ஆத்மி மக்களை தவறாக வழிநடத்துகிறது

அனைத்துத் துறைகளிலும் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதால் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக விஜய் கோயல் விமர்சித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் கோயல், “ஆம் ஆத்மி அரசு பொய் கூறிவருகிறது. கல்வி துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது. இதுகுறஇத்து அறிந்துகொள்ள நான் முஸ்தபாபாத்திலுள்ள பள்ளிக்குச் சென்றேன். அவர்கள் கூறியதற்கு மாறாக அது மிக மோசமான நிலையில் இருந்தது. அப்பள்ளியின் நிலைமையை கண்டாலே, ஆம் ஆத்மி கல்வியை முன்னேற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வருக்கு நன்றி…. ”கடவுள் அவரை ஆசிர்வதிப்பார்”…. பிரசாந்த் கிஷோர்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து தன்னை நீக்கிய முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார். பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்த அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபகாலமாக நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்துவந்தார். இதனிடையே, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்தை எதிர்த்து கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருப்பணனின் ‘பொறுப்பற்ற’ பேச்சுக்கு ‘பொறுப்பான’ பதிலளித்த செங்கோட்டையன் …!!

அமைச்சர் கருப்பணனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நிதியைப் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்படும்’ என உறுதிபடத் தெரிவித்தார். ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் -2ஏ முறைகேடு குறித்தும் விசாரணை …!!

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப் -2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசரனை நடைபெற்று வருவதாக TNPSCதெரிவித்துள்ளது . குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அதில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும்  பலரை கைது செய்யும் நோக்கில் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தற்போது டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய புள்ளி, கருப்பு ஆடு….. ”களை எடுக்கப்படும்”…. அமைச்சர் எச்சரிக்கை …!!

TNPSC குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த  வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும்  சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

‘விஜய்ரகு கொலைக்கு திருமாவளவன் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?’ – ஹெச். ராஜா

பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக செயலாளர் விஜய்ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை போர்வையாகப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்துகின்றன நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC முறைகேடு… ”குரூப் 2 தேர்வு இரத்து”… மறு தேர்வுக்கு ஆலோசனை …!!

TNPSC குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள முறைகேடு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்து விடலாமா என தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த  வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அமைச்சர் ஆலோசனை …!!

TNPSC தேர்வு முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கோடு கொண்டிருக்கிறார். குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக அரசு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW : ”ஆளுநருக்கு எதிராக போராட்டம்” கேரளா பேரவையில் பரபரப்பு …!!

கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வாசகத்தை ஆளுநர் உரையில் வாசிக்க மறுத்ததால் ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டின. இந்நிலையில் இன்று கேரளா சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரையில் குடியுரிமை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: ‘சாமானியர்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

பொருளாதார மந்த நிலையை சரிசெய்யவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் சாமானியனின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் சேகர் ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய சிறப்பு கட்டுரை இதோ..  இந்திய மக்களின் பார்வை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது தான் இருக்கும் என்றே சொல்லலாம். […]

Categories
மாநில செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். க.அன்பழகன் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். திமுக கட்சியின்  பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர்.  திமுக தலைவர் கருணாநிதியிடம் அதிக நெருக்கமாக இருந்தவர்.  திமுக பொதுச்செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி – பிரதமருக்கு நன்றி

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திறமைக்கு மதிப்பில்லை…. கேவலமான நிலை இந்தியாவில் நிலவுகிறது…. நீதிபதி கிருபாகரன் பேச்சு…!!

ஆளைப் பிடித்து உயரவேண்டும் என்ற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைப்படுகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் வார இதழ் துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார். மேலும் ஒருவன் உடல் நலத்தோடு   வாழ்ந்தால் அதைவிட செல்வம் எதுவும் கிடையாது எனவும், உடற்பயிற்சி விளையாட்டு பற்றி தெரியாத குழந்தைகளாக இன்றைய தலைமுறையினர் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்கள் மக்களின் கவனத்தை மாற்றுவதாகவும் அவர் கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏங்கிய ஸ்டாலின்… கிடைக்காத விரக்தி… பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார்..!!

ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும் மக்கள் செல்வாக்குகளையும் பெற முடியாத விரக்தியில் ஸ்டாலின் உள்ளதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் கீழ் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஆகியப்பகுதிகளில் ஒரு வழித்தட சாலையினை இரு வழித்தடமாக மாற்றி, அமைப்பதற்கான 602 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூமி பூஜை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட விழாவினை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் […]

Categories
அரசியல் அரியலூர் மாநில செய்திகள்

“TNPSC” பண இருக்க போய்தான பண்ணாங்க…. முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் பறிமுதல்….!!

tnpsc முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல்  செய்ய வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழக அரசு ஐந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குலக்கல்விக்கு வழிவகுப்பதாக தெரிகிறது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கைது செய்யாதீங்க…. அப்படி செஞ்சா ? எச்சரித்த மு.க.ஸ்டாலின் …!!

அமைச்சர் எஸ் பி வேலுமணி  விமர்சித்ததற்காக திமுகவினர் மீண்டும் கைது செய்யப்பட்டால் கோவையில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டம் அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் SP வேலுமணியை பற்றி பேசியதற்காக திமுகவைச் சேர்ந்த ஏவி முத்துலிங்கம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு கிராம சபை என்பது மக்கள் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரி தேர்தல் ஆணையர் விவகாரம் – நேரில் ஆஜரான தலைமைச் செயலர்

மாநில தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் அஸ்வனி குமார் சட்டப்பேரவை உரிமை மீறல் குழு முன்பு ஆஜரான சம்பவம் அரசு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் பாலகிருஷ்ணனை மாநில தேர்தல் ஆணையராக அரசு நியமித்தது. இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில் தலைமைச் செயலரின் உத்தரவுப்படி, உள்ளாட்சித் துறை இயக்குநர் […]

Categories
தேசிய செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராகப் போராட பணம் வாங்கினேனா?’ – மூத்த வழக்கறிஞர் ஆவேசம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் பணம் பெறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். சமீபத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததை மேற்கோள் காட்டிய அவர், அதேபோல் நிர்பயா தாயார் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆஷா […]

Categories

Tech |