நாடாளுமன்ற தேர்தல் பணப்புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் பாராளுமன்ற முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவாக வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக […]
