நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வாரிசுகள் வேட்பாளராக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று நடந்த முதல்கட்ட வாக்குபதிவில் பல்வேறு […]
