தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநில இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சென்னை டிஜிபி அலுவலகம் எதிரே சிவச்சந்திரனின் கால் டாக்ஸியில் வடமாநிலத்தவர்கள் ஏறியுள்ளனர். குடிபோதையில் இருந்த இருவரும் ஆர்கே சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில் ஏசி குளிர்ச்சி போதவில்லை என்று கூறி தகராறு செய்ததோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காரை நிறுத்திய […]
