பணியிடைமாற்றம் செய்த வேதனையினால் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் விழுப்புரம் to காட்பாடி வரை செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்றதும் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளுக்கும் […]
