காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் மருங்காபுரி பகுதியில் வசிக்கும் பவானி என்ற நர்சிங் படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் […]
