மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 43 நபர்களை கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களாக தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாராய விற்பனை, மது விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட 43 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3,465 லிட்டர் புதுச்சேரி சாராயம், 12 […]
