மேம்பால சுற்று சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் போச்சம்பள்ளி பகுதியில் தங்கியிருந்து தமிழ்நாடு 7-வது சிறப்பு காவல் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஞானப்பிரகாசம் பெருந்துறையில் இருக்கும் நண்பர் ஒருவரை […]
