சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கொரியர் சர்வீஸ் நடத்துபவர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் நடத்துபவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். தற்போது மாற்று வழியாக ஆம்னி பேருந்து, பார்சல் சர்வீஸ், மற்றும் கொரியர் ஆகியவற்றை பயன்படுத்தி போதை பொருட்களை அனுப்புகின்றனர். […]
