Categories
உலக செய்திகள்

கிறிஸ்துவ பள்ளி மைதானம்…. 11 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

கிறிஸ்துவ தனியார் பள்ளி மைதானத்தில் 11 மாத குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் மத்திய பெர்த் நகரில் ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவ தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அதன் பெயர் கிங்ஸ்வே கிறிஸ்டியன் காலேஜ் பள்ளி என்பதாகும். இந்தப் பள்ளியின் மைதானத்தில் ஒரு குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்ததுள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மினி பஸ் கவிழ்ந்ததில் 20 பேருக்கு காயம் …

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் . ஆலங்குளதிற்கு  சென்று கொண்டிருந்த மினி பஸ் , துத்திக்குளம்  சாலை அருகே வளைவில் அதிவேகத்தில் திரும்பியபோது,  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில்   ஓட்டுனர் அருள்ராஜ், நடத்துநர் பால்ராஜ் மற்றும் 23 பயணிகள் காயமடைந்தனர். ஆலங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைகளில், அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுக்குறித்து  ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர் .

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய  இருவர் கைது !!!

திருப்பூரில்,  மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய   இரு வாலிபர்கள்  பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது . ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில்  இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக  நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம்  அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த  பொதுமக்கள் மற்றும் மற்ற  பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள்  சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் நகைபறிப்பு !!!கொள்ளையர்கள் அட்டகாசம் !!

சேலத்தில் ,ஓடும் ரயிலில் நடந்த   நகைபறிப்பு சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது . சேலம் ,சங்ககிரி அருகே மாவெலிபாளையம் என்ற ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகில் தரைவழி பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது . அதனால்   ரயில்கள் குறைந்த  வேகத்தில் இயக்கப்படுகின்ற நிலையில்  கொள்ளையர்கள்  சென்ற  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 4 ரயில்களில் ஏறி 24 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .   ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் ,விசாரணை நடத்திய நிலையில் ,20 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செயின் திருட்டு…. கோவிலில் சாமி கும்பிடும்போது கைவரிசை !!!

தஞ்சையில், கோவிலில் சாமி கும்பிடும் போது 4 பவுன் செயின் திருடு போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் பிரதான சாலை தெருவைச் சேர்ந்தவர் திருஞானத்தின்  மனைவி 75 வயதான சீதாலெட்சுமி . இவர்  கரம்பயம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு  வெளியே வந்து பார்த்த போது  கழுத்தில் இருந்த  4 பவுன் செயின்  காணாமல் போனதை கண்டு அதிர்ந்தார். கோவிலில் சாமி கும்பிடும் போது, கூட்டத்தில் மர்ம நபர் யாரோ  சீதாலெட்சுமியின் செயினை  […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் 4 குழந்தைகள்  உடல் எரிந்து பலி ! சோகத்தில் கனடா …

கனடா நாட்டில் , வீடு தீ பிடித்து எரிந்ததில் தாயுடன், 4 குழந்தைகள் உடல் எரிந்து இறந்தனர்.  கனடா நாட்டிலுள்ள , ஒண்டாரியோ நகரில் ,நேற்று வீடு ஒன்றில்  திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக  பரவியதால் , தாயுடம், 4 குழந்தைகள்  பரிதாபமாக  உடல் கருகி இறந்தனர் . பின் தகவலறிந்த  மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்  குறித்து போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேஸ்புக்  பெண்களிடம், பெண் குரலில் பேசி மோசடி…இருவர் கைது!! பெண்களே உஷார் !!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக்  களை குறி வைத்து  நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய  போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி  , பெண் குரலில் பேசியுள்ளனர் . பின்னர்  தங்களுடைய நகைகளை ஒரு  கோவிலில் வைத்து வணங்கினால்  செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும்  கூறி அதே போல்  வழிபட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கந்துவட்டி கொடுமை…, ஜவுளி தொழிலாளி தற்கொலை ..ஈரோட்டில் பரிதாபம் ..!!

ஈரோட்டில் கந்துவட்டி கொடுமையால், ஜவுளி தொழிலாளி ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் , பழைய பாளையத்தை சேர்ந்தவர்  ஸ்ரீதர். இவர் ஈரோட்டில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். ஆறு  மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம்  நாற்பதாயிரம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மொத்தம் வட்டித்தொகையாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் .இவர்  30 ஆயிரம் ரூபாயை முதலில் செலுத்திவிட்டார் .பின்னர் மீதமுள்ள பணத்தையும் உடனடியாக செலுத்துமாறு நிதி நிறுவனம் மிரட்டியதால்  மனமுடைந்த ஸ்ரீதர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிமாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது !!

கன்னியாகுமரியில் ,  பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த,வேன் ஓட்டுநர் வினு என்பவர்  16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது . அதற்கு சிறுமி சம்மதிக்காததால் , வினு அந்த சிறுமியை  யாரும் பார்க்காத வேளையில், வாயில் துணியை வைத்து  பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளான்.   அந்த சிறுமியை வினு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5பவுன் நகை பறிப்பு ……

மதுரையில் மூதாட்டியிடம் பட்டபகலில் செயின் பறித்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் நாச்சியார் என்ற  மூதாட்டி . இவர் தெருவில் நடந்து சென்ற போது,  இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், முகவரி கேட்டுள்ளனர் .இந்நிலையில் திடீரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் . இதற்கிடையில் தலைக்கவசம் அணியாமல் துணிச்சலாக நகையை பறித்த  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது . கூடல்புதூர் காவல்துறையினர் இரு இளைஞர்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4300 மதுபாட்டில்கள் பறிமுதல் ..

காஞ்சிபுரம் அருகில்  வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில்  உள்ள வயல்வெளியில்  மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து  போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி  […]

Categories

Tech |