காவல்துறையினருக்கு தெரியாமல் சிறுமியின் உடலை எரித்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சின்னகட்டளை பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த 17 வயது சிறுமி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தெரியாமல் முத்துவேல், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இணைந்து சிறுமியின் சடலத்தை எரித்து விட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக […]
