பணியின்போது உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு கமிஷனர் நிதியுதவி தொகைக்கான வரைவோலையை வழங்கியுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள தலைமை செயலக காலனி காவல்துறை அதிகாரியான எஸ்.ஐ. பாபு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.ஐ. பாபு உயிரிழந்துவிட்டார். இவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் வரைவோலையை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கியுள்ளார். மேலும் பணியின் போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த சென்னை […]
