போலீஸ் ஏட்டை ஹெல்மெட்டால் தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் ஜார்ஜ் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜார்ஜ் பீட்டர் ஆன்லைன் மூலம் கோழிக்கறி உணவை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து உணவைக் கொண்டு வந்த ஊழியர் சற்று தாமதமாக வந்ததால் ஜார்ஜ் பீட்டர் அவரை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஊழியர் ஜார்ஜ் பீட்டரை தனது ஹெல்மெட்டால் […]
