பணம் கொடுக்காததால் கூரை வீட்டிற்கு தீ வைத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகாததால் கூரை வீட்டில் தனியாக வசித்துள்ளார். இந்நிலையில் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் விக்னேஷ் என்பவர் கிருஷ்ணமூர்த்தியிடம் நன்கு பழகி வந்துள்ளார். இதனால் விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தியிடம் மது அருந்துவதற்காக அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். அதேபோல் கிருஷ்ணமூர்த்தியிடம் விக்னேஷ் மது அருந்துவதற்காக பணம் கேட்டபோது […]
