சட்ட விரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்கு அப்பகுதியில் ரகசியமாக சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கட்டால் என்ற பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக சங்கர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
