போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் வசிக்கும் சிறுமி தனது நண்பரான ஹரிகிருஷ்ணன் என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ்குமார், அஜித், பத்மாஸ்வரன் ஆகிய 3 வாலிபர்கள் தகராறு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சிறுமி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். […]
