16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கூலித்தொழிலாளியான வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டார். இதனால் வீரமணி தனது 2 பெண் குழந்தைகளையும் மாமனார் பராமரிப்பில் வளரவிட்டுள்ளார். இந்நிலையில் முன்னூராங்காடுவெட்டி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் வீரமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், வீரமணி […]
