பயிர்களை சேதப்படுத்திய மயில்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற விவசாயி ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் தனது சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு அதை பராமரித்து வந்துள்ளார். அப்போது மக்காச்சோள பயிர்களை மயில்கள் வந்து சேதப்படுத்தி சென்றுள்ளது. அதனால் சந்திரன் பயிர்களை பாதுகாக்க வயலில் குருணை மருந்தை தூவிய நிலையில் அதை ஆண் மற்றும் […]
