கிணற்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாக்கியலட்சுமி மெயின் ரோடு பகுதியில் நித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் குடிநீரை தனது வீட்டின் தரைத்தளத்தில் இருக்கும் உறை கிணற்றுடன் இணைத்து விட்டார். இந்நிலையில் கழிவுநீர் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால், கழிவு நீர் கிணற்று நீரில் கலந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து 30 அடி ஆழம் கொண்ட […]
