16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நஞ்சேகவுண்டன்புதூரில் வசித்து வரும் ஓவியச்செல்வன் என்பவர் ஒரு சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொதுமக்கள் […]
