11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் பெறுவதற்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘2020 மார்ச் , ஏப்ரல் மாதம் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்க வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைபாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் […]
