வீட்டில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த நபரை மின்னல் தாக்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அபிங்டனில் எய்டன் ரோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 33 வயதாகிறது. இவர் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது ப்ளே ஸ்டேஷனில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உரத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. மேலும் அவர் தனது உடலில் ஒரு கடினமான உணர்வை உணர்வையும் உணர்ந்துள்ளார். இதனால் அவர் ஜான் ராட்க்ளிஃப் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். […]
