பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தஞ்சையின் மையப் பகுதியில் தஞ்சை ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருக்கும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் கொரோனா காலத்தில் ஐம்பது ரூபாயாக […]
