பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை ரோடு எம்.ஆர்.டி நகரில் செந்தில் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு பிளாஸ்டிக் குடோனை கடந்த இரண்டு வருடமாக நடத்தி மொத்த வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு திடீரென இந்த பிளாஸ்டிக் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இச்சம்பவம் குறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
