விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி கமர்சியல் சாலையில் இருக்கும் கடைகளில் நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் சுகாதார அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைக்கு வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து 5 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். […]
