நேபாளத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி இரண்டு பேர் பலியாகினர் . நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் மலைமீது அமைந்துள்ளது டென்ஜிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையம். இது மிகச்சிறிய விமான நிலையமாகும். இங்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்விமானங்கள் இமயமலையின் அழகை பயணிகளுக்கு சுற்றிக்காட்ட பயன்படுகின்றன. இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில் விமானநிலையத்திலிருந்து சும்மிட் என்ற சிறிய ரக விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் விமானி ரோகல்யா, துணை […]
