ஹைதராபாத்: அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினத்தை ஆந்திராவின் தலைநகராக உருவாக்கலாம் என அமெரிக்கவைச் சேர்ந்த பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. பின்பு 10 ஆண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களின் தலைநகரமாக ஹைதராபாத் இருக்கும் எனவும் அதன் பிறகு தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகவே ஹைதராபாத் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 10 ஆண்டுகளுக்குள் ஆந்திர மாநிலம் தனது தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமராவதியை ஆந்திர […]
