இன்றைய பஞ்சாங்கம் 14-09-2022, ஆவணி 29, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.26 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் காலை 06.57 வரை பின்பு பரணி. மரணயோகம் காலை 06.57 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹாபரணி. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 14.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் […]
