புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுவேதா என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் விதவிதமாக பதிவிடுவதில் சுவேதா மிகுந்த […]
