பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போண்டாகைடன் நகரிலிருந்து 219 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.௦ ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது 139 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான தவாயோ நகரில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. அதோடு […]
