பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற கோரி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுக இளைஞரணி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலம் திருச்சிற்றம்பலத்தில் தொடங்கி காலகம், கொன்றைக்காடு, ஆண்டவன் கோவில் வழியாக பேராவூரணியில் சென்று முடிவடைந்துள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், அன்பழகன், ஒன்றிய […]
