முஷாரப் உயிருடன் பிடிபடாவிட்டால் அவரின் சடலம் தூக்கில் தொங்கவிடப்படும் என பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதியாக 1998ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பர்வேஸ் முஷாரப். 2001-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்து அந்நாட்டின் அதிபராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால், அங்கு போராட்டங்கள் வெடித்தன. பதவி பறிக்கப்படுவதற்கு முன்பே 2008ஆம் ஆண்டு […]
