சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்காத வழக்கில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாடகம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரில் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
