துணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினர், அதிமுக தொண்டர்களுடன் பொங்கலை கொண்டாடினார். அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது […]
