பெரம்பூர் அருகே 5 மாத பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ராகவன் சாலைப் பகுதியில் இருக்கும் குப்பைத்தொட்டி ஒன்றில் 5 மாத பச்சிளம் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் தூக்கிவீசிச் சென்றுள்ளனர். அந்த குழந்தையை அப்பகுதியிலிருந்த நாய் ஒன்று குப்பை தொட்டியிலிருந்து சாலையில் இழுத்துப்போட்டு கடித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த நாயை அங்கிருந்து விரட்டிவிட்டு, திரு.வி.க. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து […]
