அரியலூர் அருகே நிலத்தகராறில் தனது தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50) என்பவரும் இவரது சகோதரர் ராமலிங்கம் (வயது 46) என்பவரும் விவசாயிகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்து வந்த நிலையில், ராமலிங்கம் அந்த நிலத்தை தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பிரித்து கொடுக்க மறுத்ததால் அடிக்கடி இருவருக்கிமிடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
