Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து இதான் நடக்குது… அதிர்ச்சியடைந்த விவசாயிகள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் பசுமாட்டை திருடி சென்ற சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விஜய கோபலபுரம் பகுதியில் பாலன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பாலனுக்கு சொந்தமான பசுமாட்டை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் பாலன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பசு மாட்டை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதுல ஏறாமல் இருந்திருக்கலாம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின் மாற்றியின் மீது ஏறிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோட்டத்திற்கு பக்கத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நவநீத கிருஷ்ணன் அதனை சரி செய்வதற்காக மின் மாற்றியின் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நவநீதகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட நவநீத கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விலக்கி விட முயற்சிக்கும் போது… பெண்ணுக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தந்தை மகனின் தகராறை விலக்கி வைக்க முயற்சி செய்த போது பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இதில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரங்கசாமி தனது சொந்த ஊருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தையான ரங்கசாமியிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னேன்… தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரம்பலூரில் நடந்த சோகம்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருப்பதற்காக பிரியங்காவை அவரது தாயார் ராசாத்தி திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன லவ் பண்ண மாட்டியா…? கேட்டதும் அதிர்ச்சியடைந்த தாயார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை வற்புறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஜேந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கஜேந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம் நடந்தவற்றை தெரிவித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“உன்ன சுட்டு கொன்னுருவேன்” அச்சத்தில் உறைந்த பெண்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விடுவேன் என கணவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொண்டமாந்துறை பகுதியில் கர்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டபோது, கோபத்தில் கர்ணன் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து விஜயாவை சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாமியப்பா நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டு படிக்கட்டில் நின்று கொண்டிருந்த லதா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முக்காடு போட்டு வலியுறுத்தல்… தொடர்ந்து 3-வது நாள்… போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்…!!

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து 3-வது நாளாக தனது தலையில் சேலையால் முக்காடு போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு எங்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், ஓய்வூதியம் பெறும் போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாராவது கதவ திறங்க… 4 மர்மநபர்களின் செயல்… போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு பகுதியில் நவநீத பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடுதுறை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவனான செங்குட்டுவனை விட்டு பிரிந்து இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று 4 மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாதம் ரூ.1000 உதவித்தொகை… தேர்வு எழுதிய 3012 மாணவ மாணவிகள்… தெரிவித்தார் கல்வி அதிகாரி…!!

மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வை 3012 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களிலும் அரியலூர் மாவட்டத்தில் 15 மையங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. அதாவது காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும் அதன்பின் 11.30 மணி முதல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருட்டு நடத்துச்சா இல்லையா…? கொள்ளையர்களை சீக்கிரம் கண்டுபிடிங்க… மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்…!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை என்னும் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் சிசிடிவி கேமராவின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வங்கியில் பணம் கொள்ளை போயிருக்கிறதா என காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதே பகுதியில் வங்கியின் அருகிலிருந்த நான்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“எங்க கிராமத்துல ஜல்லிகட்டு நடத்த போறோம்”… அனுமதி தாங்க… கலெக்டரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்…!!

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய அனுமதி வேண்டி மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் இருக்கும் ஜல்லிக்கட்டு நல சங்கத்தின் தலைவர் பாஸ்கர் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து நேற்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் “அன்னமங்கலத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அப்பகுதியில் இருக்கும் விழா குழு மற்றும் கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராடுவோம்”… மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்… 23 பேர் அதிரடி கைது…!!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 6-வது நாளாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 6-வது நாளாக பாலக்கரை ரவுண்டானா அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பு ஊதியத்தில் பணி புரிபவர்களுக்கு கால ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 23 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பாரத்துடன் அளவு கடந்த வேகம்… லாரிகள் சிறைபிடிப்பு…. மக்கள் போராட்டம்….!!

அதிவேகமாகவும் அதிக பாரம் ஏற்றியும் செல்லும் டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெடுவாசல், கவுள்பாளையம், இறையூர், கல்பாடி ஆகிய கிராமங்களில் அதிகளவு கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து டிப்பர் லாரி அதிக வேகமாகவும் அதிக பாரம் ஏற்றி கொண்டும் வருவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து நேற்று அந்த வழியாக வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியையை மாற்றாதீங்க… சாலை மறியலில் மாணவர்கள்… நிர்வாகம் எடுத்த முடிவு..!!

 பள்ளி தலைமை ஆசிரியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செல்வமுருகன் மானிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் 7 ஆசிரியர் பணியாற்றும் நிலையில் சுமார் 265 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் வாசுகி என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக பள்ளி நிர்வாகத்திற்கும் தலைமை ஆசிரியையான வாசுகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்றவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க கைக்கடிகாரம் உள்ளிட்ட நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியை சார்ந்த குருநாத பிரபு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கொரோனா ஊரடங்கிற்காக இவர் தனது  சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி திவ்யா கர்ப்பிணியாக இருப்பதனால் திவ்யாவும் அவரது பெண்குழந்தையும் திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். மனைவியை பார்ப்பதற்காக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிட்டிங்க…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்…. போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றுவதாக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்து விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த வாகனங்களையும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என் குறையை கேட்க மாட்டுக்காங்க… தீ குளிக்க வந்த முதியவர்… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

 தீ குளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் காலை முதியவர் தீகுளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை பிடித்து கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த முதியவர் லாடபுரம் கிராமத்தைச் சார்ந்த பரமசிவன் என்பதும் மேலும் அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமான கூரைவீடு இடிந்துவிட்டதால் அதே இடத்தில் புதிய வீடு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய கார்…. மரத்தில் மோதி பார்க்கிங்…. முதியவருக்கு ஏற்பட்ட நிலை…!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரத்தை சார்ந்தவர் ஆனந்த். இவரது மாமனாரான ரங்கராஜ் கோவில்பட்டியை சார்ந்தவர். ஆனந்த் கோவில்பட்டிக்கு சென்று ரங்கராஜை அழைத்துக்கொண்டு காரில் வந்துள்ளார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருக்கும் பொழுது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ரங்கராஜ் பலத்த காயம் அடைந்தார். அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதுக்காக இந்த முடிவு எடுத்தீங்க… மனைவி குழந்தைகளின் கதறல்… போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் மங்கலமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை சார்ந்தவர் வீரமுத்து. இவர் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்த வீரமுத்து விடுமுறை முடிந்த பின்னரும் வேலைக்கு செல்லாமல் ஊரிலேயே சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீரமுத்து பிணமாக மிதந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கல்யாண வீட்டுக்கு போனும்” உறவினருடன் பயணம்…. வழியில் நடந்த விபரீதம்…!!

டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளத்தைச் சார்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது உறவினரான தேவேந்திரன் என்பவருடன் மருதையான் கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். கோவில்பாளையம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தேவேந்திரன் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒரே சமயத்தில் இரண்டு இடம்…. மர்ம நபர்களின் கைவண்ணம்…. போலீஸ் விசாரணை….!!

கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செந்தில்குமார் என்பவர் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்தவர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரத்தை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆப்சென்ட் போடுறாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்… கல்லூரியில் பரபரப்பு…!!

பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். அதோடு இக்கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேப்பூர் பகுதிக்கு போக்குவரத்து வசதி சரியாக இல்லாத காரணத்தால் கல்லூரிக்கு வரும் அனைவரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அளவில்லாத பாசம்… தாங்க முடியாத இழப்பு… தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் இறப்பு…!!

தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்காவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூரை என்ற பகுதியில் பெரியசாமி-பெரியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். பெரியம்மாளுக்கு செல்லமுத்து என்ற தம்பி உள்ளார். இவரது தம்பி கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் திருவாலந்துறையில் உயிரிழந்தார். இவருக்கு திருவாலந்துறையில் கடந்த 9ஆம் தேதி 90வது நாள் துவக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. அங்கு பெரியம்மாள் தனது தம்பி இறந்த துக்கத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்து அழுதுள்ளார். அப்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

4நாட்கள் ஆச்சு…! யாருக்கும் இல்லை…. கெத்து காட்டும் பெரம்பலூர்…!!

நான்காவது நாளாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் நான்காவது நாளாகவும் யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே 2258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  2236 பேர் மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1 நபர் மட்டுமே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து 253 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடிக்க தண்ணி இல்ல… மறியல் செய்த பெண்கள்… பரபரப்பான சாலை…!!

குடிநீர் வினியோகிக்க படாததால் காலி குடங்களுடன் சாலைக்கு வந்த பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீரானது  ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் இரண்டு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் நகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் எம்ஜிஆர் நகர் அருகே […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடு… மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள்… பத்து மாதம் சிறை தண்டனை…!!

கூட்டுறவு சங்கத் துறையில் பணிபுரிந்த அலுவலர்கள் மோசடியில் ஈடுபட்டதாக 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கே .ராஜகோபால் என்பவர் தனி அலுவலராக பணியாற்றி வந்தார். ராஜகோபால் பொன்னி அரிசி விற்பனை, எள் கொள்முதல், காலி சாக்குகள் போன்றவற்றை விற்பனை செய்ததில் கூட்டுறவு சங்கத்திற்கு வரவேண்டிய ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 678 -ல் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் சட்டத்திற்கு புறம்பாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த மனசு தான் சார் கடவுள்….. “மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்” நெகிழ வைத்த அரசு பள்ளி ஆசிரியர்….!!

ஏழ்மையால் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு பள்ளி ஆசிரியை செய்த செயலுக்கு  சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எளம்பலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் கணித பட்டதாரி ஆசிரியரான பைரவி என்பவர், அப்பகுதியில் கொரோனா பாதிப்பால் பலரது குடும்பங்கள் ஏழ்மையில் தவித்து வருவதையும், ஏழ்மையின் காரணமாக அவர்களால் ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான மொபைல் போனை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதையும் உணர்ந்து, ஏழ்மை  கல்வி கற்பதற்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமியை கடத்தி திருமணம்… இளைஞரை போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

குன்னம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு.. வயது 23 ஆகிறது.. பொறியியல் பட்டதாரியான இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது… வாகனம் மோதி 3 வயது புள்ளிமான் உயிரிழப்பு..!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வடகரை, முருகன்குடி, வெண்பாவூர், பாடாலூர், சின்னாறு அன்னமங்கலம்,  உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் தான்  அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், மான், மயில் உள்ளிட்டவை உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும்  குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்துவிடுவது சகஜம்.. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தங்கையை திருமணம் செய்த இளைஞர்… ஆத்திரமடைந்து சண்டைபோட்ட அண்ணன்… தடுக்கமுயன்ற இளைஞர் குத்திக் கொல்லப்பட்ட சோகம்..!!

குடும்ப பிரச்னையை தடுக்க வந்த இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் பாலமுருகன் என்பவரின் தங்கையை காதலித்து பெண் வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் பாலமுருகன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் நேற்று இரவு பாலமுருகன், வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.. இந்த மோதலின்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வக்குமார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடன் ரொம்ப இருக்கு… பணம் கொடுங்க… கொடுக்க மறுத்த தாய் மற்றும் மகள் கொலை… பெண் உட்பட இருவர் கைது..!!

சொத்துக்காக தாய் மற்றும் மகளை கொலை செய்த பெண் உட்பட 2 பேரை  காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் இளங்கோ நகரை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மனைவி ராணி.. இவருக்கு வயது 60 ஆகிறது.. தமிழரசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு வள்ளி(35) மற்றும் ராஜேஸ்வரி (32) என்ற இரு மகள்கள் உள்ளனர்.. இதில் வள்ளி என்பவர் அதே ஊரை சேர்ந்த ராம்குமாரை திருமணம் செய்து விட்டார்.. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரி பள்ளத்தில் ஆண் சடலம்… மண் சரிந்து இறந்தாரா?… போலீஸ் விசாரணை..!!

பெரம்பலூர் அருகே கல் குவாரி பள்ளத்திலிருந்து ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்திலுள்ள கல் குவாரியில் 80 அடி பள்ளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சேலம் மாவட்டம் வைகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தோஷ்  என்பவர் சடலமாக கிடந்தார்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் இறந்த உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் 80 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை… போலீசார் விசாரணை..!!

பெரம்பலூர் அருகே பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் துறையூர் தாலுகா பெருமாள்பாளையம் நாயுடு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் சேலம் மாவட்டத்தில் பிளம்பர் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு 40 வயதில் சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 22 வயதில் யுவனேஷ் என்ற மகனும், 19 வயதில் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் லாடபுரத்தில் மயிலூற்று அருவி சாலையிலுள்ள கண்ணுக்குழி என்ற இடத்தில் வசித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலை… அடுத்தடுத்து கொலையால் அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் நேற்றிரவு பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  பெரம்பலூர் மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.. இவருடைய 27 வயது மகன் வீரமணி நாள்தோறும் காய்கறிச்சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் மீது கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு (ஜூன் 7) வீட்டில் இருந்த வீரமணியை சிலர் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வெகு நேரமாகியும் வீரமணி வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர் […]

Categories
மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் 14 பேர், திருவள்ளூரில் 45 பேர், பெரம்பலூரில் 33 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு – முழு விவரம்! 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 சிறுவர்கள், ஒரு சிறுமி உட்பட 14 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீ பிடித்து எரிந்த லாரி… பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு சேதம்!!

பெரம்பலூரில் மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதமடைந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஓன்று தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த டிரைவர் பதற்றத்துடன் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள்

எல்லை பாதுகாப்பு….. வெளியே வர தடை….. கிருமிநாசினி தெளிப்பு….. பெரம்பலூரில் பாதுகாப்பு பணி தீவிரம்…!!

கொரோனா நோய் தொற்றுக்கான பல்வேறு நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பெரம்பலூர் நகராட்சி நகரம் முழுவதும், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, நகராட்சி ஆணையர் மன்னன், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அவசியமில்லாமல் மக்கள் யாரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

துப்பாக்கி…… வாக்கி டாக்கி….. ஸ்டேஷன்க்குள் சென்று….. LKG…. UKG…. KIDS லூட்டி….!!

பெரம்பலூரில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் நேரடியாக காவல் நிலையம் சென்று ஒரிஜினல் துப்பாக்கி, வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றுவரும் 50க்கும் மேற்பட்ட எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நேரடியாக சென்று ஒரிஜினல் துப்பாக்கி வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். காவல் நிலையத்திற்கு வருகை தந்த குழந்தைகளை காவல் ஆய்வாளர் நித்யா என்பவர் வரவேற்று பூங்கொத்து, இனிப்புகள் வழங்கினார். இந்த  நிகழ்ச்சியில் காவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்!

விசுவக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறையினர் விலங்கு நல வாரியம் அலுவலர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களிலிருந்து 450 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கிடங்கு கட்டும் பணி தொடக்கம்..!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான கிடங்கு கட்டும் கட்டட பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா நேற்று தொடங்கி வைத்தார். பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கிடங்கு கட்டும் கட்டட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ரூ. 2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் 789 சதுரமீட்டர் பரப்பளவில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இருப்பு கிடங்கு கட்டப்படவுள்ளது. முதல் நிலை சோதனை அறை, இரண்டாம் நிலை சோதனை அறை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அழிந்து வரும் 400க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்கள் – போராடி மீட்கும் மோகனகிருஷ்ணன்..!

அழிந்து வரும் 400க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களை வருங்கால தலைமுறைக்கு அடையாளம் காட்டப் போராடி வருகிறார், மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன். தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போன மாவட்டங்களின் வரிசையில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. வறட்சியான இந்த பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகளாக உயிரைக்கொடுத்து போராடி, தற்போது நூற்றுக்கணக்கான மூலிகைத் தாவரங்களை வருங்கால தலைமுறைக்கு அடையாளம் காட்ட போராடுகிறார், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் ஓவியக் கண்காட்சி; மாணவர்கள் கண்டுகளிப்பு..!!

வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் வரைந்த ஓவியங்களைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கண்டு களித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இன்று ஒவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளியின் நிர்வாக அலுவலர் குமரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒவியக்கண்காட்சியில் மாணவர்கள், ஆசிரியர்களால் வரையப்பட்ட இயற்கை காட்சிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், பழம் பெரும் நடிகர்கள், விலங்கினங்கள், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமண உதவி தொகைக்கு….. ரூ2,000 லஞ்சம்…. பெண் அரசு ஊழியர் கைது…!!

திருமண உதவி தொகைக்கு ரூ2,000  லஞ்சம் கேட்ட பெண் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் எறய சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணமும் பெறுவதற்காக ஒன்றிய ஊர் நல அலுவலக அதிகாரியான ஷெரின்ஜாய் என்பவரிடம் விண்ணப்பித்து இருந்தனர். அந்த அதிகாரி கடந்த […]

Categories
மாநில செய்திகள்

வறுமையில் வாடும் சுபாஷ் சந்திர போஸின் படை வீரர்!!

வறுமையில் வாடும் சுதந்திர போராட்ட தியாகி குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம். சுதந்திர போராட்ட தியாகி குடியிருக்க வீடின்றி வறுமையில் வாழ்ந்து வரும் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது. பெரம்பலூர் மாவட்டம் வரவு பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (93) சிறுவயதிலேயே தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். தனது குடும்ப வறுமை காரணமாக பிழைப்புத் தேடி சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு உணவகத்தில் கூலி வேலை செய்துள்ளார். தன் தாய்நாடு மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த காரணத்தினால் அகிம்சை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தலைமை…. நற்பண்பு வேணும்னா….. விளையாட்டில் ஆர்வம் செலுத்துங்க…. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி….!!

தலைமை பண்பு மற்றும் நற்பண்பை  வளர்த்துக்கொள்ள இளைஞர்கள் விளையாட்டில்  ஆர்வம் செலுத்த வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிக்கு அம்மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க பெரம்பலூர் மாவட்ட எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதையடுத்து  போட்டியில் பங்கேற்ற வாலிபர்களுக்கு தேவையான பந்து, கிரிக்கெட் மட்டை, க்ளவுஸ் உள்ளிட்டவற்றை போட்டியாளர்களிடம் வழங்கிவிட்டு போட்டியை தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரை சந்திக்க பாரிவேந்தர் திடீர் முடிவு!

தொகுதி நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்று பாரிவேந்தர் தெரிவித்தார். இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரிவேந்தர் சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு 100 கணினிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் பாரிவேந்தர் கணினிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரிவேந்தர், “கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தொகுதிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நேற்று வெற்றி….. இன்று மரணம் …. சோகத்தை ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவர் …!!

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி 26 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பின் படி மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“HEADMASTER வீட்டில்” 70 சவரன் நகை……. ரூ1,00,000 பணம் திருட்டு…… பெரம்பலூரில் பரபரப்பு….!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டம் வேந்தட்டை பகுதியை அடுத்த சின்னாறு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் செல்வம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற அவர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தற்கொலை செய்துகொண்ட தலையாரி!

குடும்ப பிரச்னை காரணமாக மது போதையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாச்சலம், இவர் துறைமங்கலம் கிராம உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வழக்கம்போல் மது அருந்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், தனது வீட்டு விட்டத்தில் வேட்டியால் […]

Categories

Tech |