மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அழகிரி பாளையம் மங்கலம் கிராமத்தில் வசந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான குணசேகர் என்பவருடன் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் எசனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி வசந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வசந்த் […]
