வாக்களிக்க கூடாது என அதிகாரிகள் மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் திடீரென எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில், அந்தியூர் வழியாக சென்ற பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திருக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]
