குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1 மாதத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தகவல் தெரிவிக்கப்படும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் […]
