போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாயனூர் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் கடந்து வந்துதான் அம்மா பூங்கா, கதவணை, செல்லாண்டியம்மன் கோயில், குடியிருப்புகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும் இந்த ரயில்வே கேட் ரயிலில் செல்லும்போது அடைக்க படுவதனால் இரண்டு பக்கமும் கார், வேன், லாரி, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் அதிக அளவில் […]
