ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று மூலஸ்தானத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்ட நம் பெருமாள் சந்திராபுஷ்கரணி குளத்திற்கு வந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து காலை 9:45 மணிக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் […]
