பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூத்திரெட்டிபட்டி கிராமத்தில் 1,2௦௦ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் இந்த சுகாதார வளாகம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வீடுகளில் […]
